பக்கம்:பாடகி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள். அதுவும் மனதை உறுத்தும் சொந்த விஷயங்களில் அவர் கள் மிகுந்த நுணுக்கத்தோடு நடந்து கொள்ளுவார்கள்.

சிறிதும் வினயமில்லாத கலி ய மூர்த் இ இதைப் புரிந்து கொள்ளாமல் தலையைக் கவிழ்ந்து கொண்டே உட்கார்ந்திருந் தான்.

‘உள்ளே வாங்க!”

கோகிலா அன்போடு கூப்பிட்டாள்.

கலி ய மூர் த் தி வேலை தேடி வந்த அடிமையைப் போல் ஒடுங்கிய உள்ளத்தோடு உள்ளே நுழைந்தான். ஒருவரையொரு வர் பார்த்துக் கொண்டனர். இரண்டு பேருடைய உருவங்களும் அழிந்திருப்பதை அவர்கள் உணர்ந்தார்கள். துக்கம் விசாரிக்கக் கூட இருவருக்ரும் தைரியமில்லை.

“என்னப்பா, இப்படி ஆகிவிட்டாய்? எனக்கு ஒரே அதிர்ச்சி யாக இருக்கிறது’ - தியாகராஜபிள்ளையே ஆ ர ம் பி த் து வைத்தார்.

நோன் திடீரென்று இப்படி ஆகிவிடவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நான் உருகுலைந்தேன். என்னுடைய அழி விற்கு வேறு யாரும் காரணமில்லை. என் தந்தையின் வீம்பும் வைராக்கியமும் தான் காரணம். புகழ்பெற்ற பாடகி முத்து லெட்சுமியை நான் துணைவியாக ஏற்றுக்கொண்டேன். பெய ரளவிற்குத்தான் அது. கு டும் ப ம், குழந்தைகள், வீடு என்ற பாசத்திற்கே அவளிடத்தில் இடமில்லை. புகழ், பணம் - இந்த இரண்டுந்தான் அவளுக்குப் புருஷனும் பிள்ளைகளும். புகழை விரும்புகிறவர்கள் முகஸ்துதிக்கு அடிமையாகி விடுகிறார்களே முகஸ்துதியைக் கேட்டால் பிசாசு கூட தேவதையாகிவிடுகிறது என்பது அவளைப் பொறுத்தவரையில் உண்மைதான். எனக்குச் சனியனுக வந்தவன் சங்கீதம் சரவணபவா - என்று முடித் தான்,

“இங்கேதான் அவன் சனியனக வந்தான்; அங்கேயும் வந்து நுழைந்து விட்டான” என்று குறுக்கிட்டார். தியாகராஜ பிள்ளை. . - -

37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/38&oldid=698970" இலிருந்து மீள்விக்கப்பட்டது