பக்கம்:பாடகி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ஆமாம் அவன் தான் இப்போது முத்துலெட்சுமியோடு சுற்றிக் கொண்டிருக்கிருன்.”

கோகிலத்திற்கு துக்கம் தாங்கவில்லை. அவளுக்கு இருமல் ஆரம்பித்து விட்டது சங்கிலித் தொடர்போல் இருமிக் கொண் டேயிருந்தாள். அவளுக்கு மூச்சுத்திணறியது. சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துவிட்டாள். x தியாகராஜபிள்ளையும் கலியமூர்த்தியும் அவளைப் படுக்கை யில் தூக்கிப் போட்டார்கள்.

வைத்தியர் இருந்தால் பரவாயில்லை. அழைத்து வரட் டுமா?’ என்று கலியமூர்த்தி பதட்டமாகச் சொன்னன்.

வைத்தியர் இருக்கிரு.ர். ஆனல் வரமாட்டார் தம்பி’ ‘வரமாட்டாரா? ஏதாவது சண்டையா?” ‘இல்லை ஒரு முறையாவது அவருக்குப் பணம் கொடுத்தால் தானே. கொஞ்ச நாட்களாக நாங்கள் வைத்தியரையே கூப் பிடுவதில்லை. மருந்து வாங்கவே படாத பாடெல்லாம் பட்டுக் கொண்டிருக்கிருேம். பிறகு எப்படி வைத்தியருக்குப் பணம் கொடுக்க முடியும்? - தியாகராஜபிள்ளை சிறு பிள்ளையைப் போல் தேம்பித் தேம்பி அழுதார்.

‘இனிமேல் விற்பதற்கு ஒன்றுமேயில்லை. இந்த வீட்டைக் கூட ஒத்தி வைத்துவிட்டோம் - என்று தியாகராஜபிள்ளை கதறிக் கொண்டே பேசினர்.

கோகிலத்தால் பேசமுடியவில்லை. தன் தந்தையை அருகில் அழைத்து ஏதோ சொல்வதற்காக விரும்பிய அவள் தரையை தட்டி அவரை அழைத்தாள்.

தியாகராஜபிள்ளை தலையைக் குனிந்து அவள் சொல்வதைக் கேட்க முயன்றார். அப்போதும் கோகிலத்தால் பேச முடிய வில்லை. கைஜாடையால், எதிரே உள்ள அறையைக் காண்பித் தாள். தியாகராஜபிள்ளைக்கு விளங்கவில்லை. சுவரில் தியாகை யரின் படம் மாட்டப்பட்டிருந்தது. அவர் கையிலே இருந்த தம்பூராவைக் காண்பித்தாள். தியாகராஜ பிள்ளைக்கு தலையில்

38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/39&oldid=698971" இலிருந்து மீள்விக்கப்பட்டது