பக்கம்:பாடகி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடி விழுந்தது போலிருந்தது. தம்பூரா ஒன்றுதான் மீதம் இருக்கிறது என்று ஜாடை காண்பிக்கிருள் என்பது அப்போது தான் அவருக்குப்புரிந்தது.

‘தம்பூரா எப்போதாவது வாங்கிக் கொள்ளலாம். கோகி லம் போய்விட்டால் மீட்க முடியுமா? - என்று கூறிக்கொண்டு தம்பூராவைத் தோளில் போட்ட வ ண் ண ம் கலியமூர்த்தி வெளியேறினன்.

“எங்கேயப்பா புறப்பட்டாய்? இதை யார் வாங்கப்போகி ருர்கள்? இதனுடைய மகிமை யாகக்குத் தெரியப்போகிறது”தியாகராஜ பிள்ளை மிகுந்த சோர்வோடு பேசினர்.

‘நீங்க நினைப்பது தவறு. இது கோகிலா பயன்படுத்தியது என்றாலே விலை அதிகமாகப் போகும். அதுவும் முத்துலெட்சு மியே இதை விலைகொடுத்து வாங்குவாள். நான் இப்போதே மதுரைக்குப் போய் இதைக் காசாக்கி விட்டு வருகிறேன்’’.

ஒரு வாரமாகியும் கலியமூர்த்தி திரும்பவில்லை. கோகிலா தினசரி இறந்து கொண்டேயிருந்தாள். நோயின் உபாதை அவளைப் புரட்டியெடுத்தது. கொஞ்சம் பணம் இருந்தாலும் அவளைக் காப்பாற்றிவிடலாமே என்று தியாகராஜபிள்ளை புழு வாகத் துடித்தார். ஆல்ை ஒரு நாள் காலை ஐந்து மணிக்கு - சூரியோதயத்திற்கு முன்னல் - கோகிலா போய்விட்டாள். அவளுடைய குரல் ஒடுங்கிவிட்டது. அவளுடைய தலைமாட்டி லிருந்து தியாகராஜபிள்ளை லேசாக மிருதங்கத்தை வாசித்துக் கொண்டிருந்தார்.

ஈமச்சடங்குகளுக்காவது கலியமூர்த்தி பணம் கொண்டு வ ரு வா ென ன் று தியாகராஜ பிள்ளையின் மனம் துடித்துக் கொண்டிருந்தது. ஆனால் கலியமூர்த்தி கொண்டுபோன தம்பூ ராவை அப்படியே திருப்பிக்கொண்டு வந்தான்.

‘கலியமூர்த்தி! என்ன இது?” - -

  • ஆம். இது ராசியில்லாத தம்பூராவாம்! முத்துலெட்சு மியே கூறுகிருள், எந்தத் தம்பூரா ஒரு காலத்தில் இசையுல கைத் தன் வழியிலே சுருள வைத்ததோ அந்தத் தம்பூரா

39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/40&oldid=698973" இலிருந்து மீள்விக்கப்பட்டது