பக்கம்:பாடகி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்று ராசியில்லாத தம்பூராவாம்!” - கலியமூர்த்தியின் கண் களிலிருந்து மொட்டுமொட்டாகக் கண்ணிர் சிந்தியது. கோகி லத்தின் சடலத்திற்கு அருகே தம்பூராவையும் படுக்கவைத்தார் கள்.

மார்கழி மாதத்திய திருப்பாவை, திருவெம்பாவை இசை யொலி பெருமாள்கோயில் கோபுரத்திலிருந்து ஒலி பெருக்கி மூலம் காற்றிலே மிதந்துகொண்டு வந்தது. அந்த இ ைச. யே கோகிலத்தின் வாழ்க்கைக்கு மங்கலமாக இருந்துவிட்டது.

இன்று அந்த வீடு வழிப்போக்கர்கள் தங்கும் மடமாகப் போய்விட்டது. புருக்களின் குறுகுறுப்பு இன்னும் ஒயவில்லை. வீட்டுக்கொல்லையில் உயர்ந்திருந்த இலவ மரங்கள் புதிய காய் களைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்தன.

கோகிலத்தினுடைய வாழ்க்கை சிறிதும் எதிர்பாராமல் பாதியில் நின்ற பாட்டாக ஆகிவிட்டது.


40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/41&oldid=698974" இலிருந்து மீள்விக்கப்பட்டது