பக்கம்:பாடகி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனந்த பைரவி 1

ராஜகோபுரம்

ஊருக்கு அப்பாலே பெரிய பங்களா. உயர்ந்த தென்னை மரங்களும், கிளே கள் அடர்ந்த மரங்களும், அரக்கர்களைப் போன்ற கூந்தல் பனைமரங்களும் அந்தப் பங்களாவின் சுற்றுப் புறத்தை இறுக்கமாக்கி வைத்திருந்தன.

பங்களா பழமையானது என்றாலும், பார்ப்பதற்கு எடுப் பானது. பங்களாவிற்குப் பின்னல் நெடுந்துாரம் வரைக்கும் பசுமையான வயல்களும் இடையிடையே சவுக்கு மரக் கூட்டங் களும் அடர்ந்திருந்தன.

பங்களாவின் கொல்லைப் புறத்தில் புராதனமான ரப்பர் ச க் க ர ங் க ள் கொண்ட கோச்சு வண்டிகள் சேதமாகிக் கிடந்தன. அவை இனிப் பயன்படாது என்று தள்ளி வைக்கப் பட்டவை போன்று தோன்றின. உபயோகத்திற்காக புதிதாகச் செய்யப்பட்டிருந்த வில்வண்டிகள் நீலத்திரை போட்டு மூடிக் கிடந்தன. மின்னும் பந்தயக் குதிரை போன்ற உயர்ந்த பூரணி மாடுகள் க ழு த் தி ல் மணிச்சரங்களுடன் அசை போட்ட வண்ணம் மாட்டுத் தொழுவத்தில் களைப்பாறிக் கொண்டி ருந்தன. புதிய மோஸ்தரில் சிறிய கார் ஒன்று ஷெட்டுக்குள் நின்றது. சிப்பந்திகள் சிலர் அங்கும் இங்கும் போய்க் கொண்டி ருந்தார்கள். அவர்களில் இரண்டொருவர் பரபரப்பாகத் திரிந் தனர். சமையல்காரன் கரண்டியும் கையுமாக அலைமோதினுன், சிற்றாள் வே லை பார்க்கும் நடுத்தர வயதுள்ள ஒரு பெண்,

41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/42&oldid=698975" இலிருந்து மீள்விக்கப்பட்டது