பக்கம்:பாடகி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்க்கு வந்தபடி ஏதோ பினுத்திக் கொண்டு கு று க் கு ம் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள்.

வேலைக்காரர்கள் ஒருவருக்கொருவர் கிசு கிசுத்துக் கொண் டார்கள் அந்தக் கிசு கிசுப்பில் ஏதோ ஒரு ரகசியம் இருப்பது போல் தெரிந்தது. - *

காரைக்குடியிலிருந்து புதுவயல் மார்க்கமாக அறந்தாங்கி செல்லும் வழியில் பாழடைந்த கோட்டை கொத்தளங்களோடு இருக்கும் ஊருக்குப் பெயர் கீழா நிலைக்கோட்டை. அங்கு பெரும் கீர்த்தியோடு வாழ்ந்த திருத்தணி மணியக்காரரின் மகன் மயில்வாகனன் மாளிகைதான் அவ்வளவு பரபரப்போடு இருந்தது.

படுத்த படுக்கையாகக் கிடக்கும் மனைவி நாச்சியாருக்கு அருகில் உட்கார்ந்தபடி, பழைய நினைவுகளில் ஆழ்ந்த சிந்தனை யில் அமர்ந்திருந்தார் அவர். பாசத்திற்குரிய அவர்களது சடை நாய் இருவருக்கும் மத்தியில் குளிர்ந்த தரையில் படுத்துக் கிடந்தது. ஊதுபத்திகள் கொத்துக் கொத்தாக எரிந்து சாம்ப லாகிக் கொண்டிருந்தன. மயில் வாகனனின் கண்கள் ஒட்டை விழுந்த பாத்திரத்தைப் போல் கசிந்து கொண்டிருந்தன.

“எத்தனையோ முறை தமிழ் புத்தாண்டு விழாவிற்கு புதுக் கோட்டைக்குப் போயிருக்கிறேன். எ ன து தந்தை இருந்த காலத்திலும் போயிருக்கிறேன். அவருக்குப் பிறகும் நானே போயிருக்கிறேன். நள்ளிரவில் நானே பல தடவை காரை ஒட்டிக் கொண்டு வந்திருக்கிறேன். நான் சிறு பிள்ளையாக இருந்தபோது என் தகப்பனரோடு மாட்டு வண்டியிலே கூட ‘புதுக்கோட்டை வருஷப்பிறப்பு பார்க் கப் போனதுண்டு. அப்போதெல்லாம் ஏற்படாத விபத்து நாங்கள் மகிழ்ச்சியோடு இருக்கவேண்டிய இந்த வசந்த காலத்திலா ஏற்பட வேண்டும்! விபத்துக்கள் நேரட்டும்; ஆனால் எங்களுக்கா இப்படி விபத்து ஏற்பட வேண்டும்! விபத்தினுல் நாச்சியார் படும் தேதனையை விட, ஊர்ப் பேச்சால் நான் படும் வேதனைதான் மிகுதியாகி விட்டது. விபத்திலே கால் முறிந்தால், பரிதாபப்படுவார்கள்; வேறு ஏதாவது காயங்கள் ஏற்பட்டாலும், உற்றாரும் சுற்றாரும்

42

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/43&oldid=698976" இலிருந்து மீள்விக்கப்பட்டது