பக்கம்:பாடகி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுண் கலங்குவார்கள். எனக்கு ஏற்பட்ட விபத்து அது போன்ற விபத்தல்லவே! மழையைக் கிழித்துக் கொண்டு வந்த பேரிடி, என் கார் மீது அல்லவா தாக்கி விட்டது. என் மூதாதைகள் செய்த தர்மங்களும், என் தந்தையார் செய்த தானங்களும் இந்த ஒரு இடியிலேயே கருகிச் சாம்பலாகி விட்டனவே! ஒரு வீட்டிலோ அல்லது ஒருவன் தலையிலோ இடி வீழ்ந்து விட்ட தென்றால், உலகிற்குத் தெரியாமல் அவன் வீட்டில் உட்கார்ந்து கொண்டே அக்ரமம் செய்து வந்திருப்பதாக முடிவு கட்டி விடும் நாடு, இந்தத் தமிழ் நாடு. நான் யாருக்குத் தீங்கிழைத் தேன்? யாருடைய சோ ற் றி ல் மண்னை இறைத்தேன்மயில்வாகனனின் ஆன்மா இப்படித் துன்பத்திலேயே நீந்திக் கொண்டிருந்தது.

ஒருக்கணித்துப் படுத்திருந்த நாச்சியார் இப் போ து திரும்பிப் படுத்தாள். இன்னும் அவள் மயக்கம் தெளியவில்லை. விபத்திற்குப் பிறகு மூடிய இ ைம க ள் திறக்கவேயில்லை. மும்தாஜின் தலைமாட்டில் உட்கார்ந்து கொண்டு அவளேயே வர்ணித்துக் கொண்டிருந்த ஷாஜஹானப் போல, மயில் வாகனன், நாச்சியாரின் வசீகரத்திலேயே ல யி த் து க் கிடந் தான்.

எல்லாம் விதிப்பயன் என்று எ ன க் கு எல்லோரும் ஆறு த ல் சொல்லுகிறார்கள். என் பெயர் விதி என்று சொல்லிக் கொண்டு யாராவது என் முன்னுல் இப்போது வருவானல்ை, அவனைச் சுட்டுப் பொசுக்கி அவனது கருமா திக்கே எலும்பில்லாமல் செய்துவிடுவேன். நியாய விரோத மாகச் செயல்படும் விதிக்கு உருவமில்லாமல் வைத்திருப்பது இயற்கையின் நீசத்தனத்திற்கு அழிக்க முடியாத சான் றில்லையா? திருடர்களைச் சட்டம் தண்டிப்பதைப் போல, தீய சக்திகக்ளுகு தண்டனை கொடுக்க யார் இருக்கிறார்கள்? மிராசுதார் வீட்டு அடியாட்களைப் போல விதியும், தலை யெழுத்தும் ஊரையே அதம் செய்வது ஏன் கடவுளுக்குத் தெரிவதில்லை?- தத்துவங்களில் மூழ்கிப்போயிருந்த மியில் வாகனன் திடீரென்று நிமிர்ந்து பார்த்தான். அவன் எதிரே டாக்டர் நின்றுகொண்டிருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/44&oldid=698977" இலிருந்து மீள்விக்கப்பட்டது