பக்கம்:பாடகி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'டாக்டர் சார், நா ன் எதற்கும் பயப்படாதவ்ன்; உங்களுக்கே அது தெரியும். ஆனல் இப்போது நான் கலக்க மடைந்திருக்கிறேன். என் மனமே சிதறிப் போயிருக்கிறது. என் உடல் நொறுங்கிய முறுக்கு மாதிரி கல கலத்துப் போயி ருக்கிறது. என் காரில் இடி விழுந்தது பற்றிக் கூட நான் கவலைப்படவில்லை. ஆனல் அதைப்பற்றி ஊரில் என்ன பேசிக் கொள்வார்களோ என்று தான் நான் வேதனைப்படுகிறேன்’ என்றான் மயில்வாகனன்,

‘இந்த விபத்து உங்களை செண்டிமெண்ட்டா பாதித் திருக்கும் என்று எனக்கு நன்றாகத்தெரியும், மயில்வாகனன்’ என் ருர் டாக்டர்.

எத்தனை கொலை வழக்குகள் என் கந்தையார் மீது ஆளுல் எதிலும் என் தந்தை தோற்றதில்லை. ஜகோர்ட் வரை போய் நாங்கள் ஜெயித்து விடுவோம். ஆனல் இந்த விபத்தில் நான் தோற்றுப் போனேன், டாக்டர்.”

‘குற்றவாளி விடுதலையாவதும், நிரபராதி தண்டிக்கப் படுவதும் தான் விதி என்று சொல்லுகிறார்கள். அந்த விதியை யும், தலையெழுத்தையும் அவர்களால் பார்க்க முடியாது மிஸ்டர் மயில்! ஒருவனுக்கு அவன் வாழ்க்கையில் ஏற்படும் விபத்தோ, விழாவோ அன்றாேடு நின்று விடுவதில்லை. அன்று தான் அவ ன் அனுபவிக்க வேண்டிய பலா பலன்களுக்கு முகூர்த்தச்கால் ஊன்றப்படுகிறது’ என்று .ெ சா ல் லி க் கொண்டே டாக்டர், நாச்சியாரை பரிசோதித்தார்.

நாச்சியாரை டாக்டர் புரட்டிப் புரட்டிப் பார்த்துப் பரிசோதித்தார். -

டாக்டரின் முகத் தி ல் வியர்வைத் துளிகள் பூத்தன. கடும் வெயிலில் க ல ப் ைப பிடித்து உழுதவனைப் போல, டாக்டர் களைத்து விட்டார்.

என்ன டாக்டர்’ ’ “மிஸ்டர் மயில் வாகனன்! காயங்களுக்குத் தான் என்னல் வைத்தியம் செய்ய முடியும். நாச்சியார்ை நான் குணப்

44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/45&oldid=698978" இலிருந்து மீள்விக்கப்பட்டது