பக்கம்:பாடகி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படுத்த முடியாது! உங்கள் மனைவிக்கு மூளை கலங்கியிருக் கிறது!’ *

டாக்டர்! டாக்டர்!’

மயில்வாகனனுக்குத் தலே சுற்றியது. நாச்சியாருக்கு .ெ வ று ம் ஊமைக் காயங்கள் தான் இருக்கும் என்று அவன் நி னை த் தி ரு ந் தான். டாக்டர் சொன்னது, அவன் தலையில் மறுமுறையும் ஒரு இடி விழுவது போலிருந்தது. அவன் கலங்கிய உள்ளத்தோடு நாச்சியாரின் தலைமாட்டில் உட்கார்ந்து கொண்டு அவளது கூந்தலேக் கோதிக் கொண்டிருந்தான். தங்க மா ங் க னி போன்ற கவர்ச்சியான தோற்றமுடைய நாச்சியாரின் வி ஆழி க ள் பளிங்கிளுல் செய்து வைத்ததுபோல் அசையாமல் இருந்தன. இதற்குள்ளாக, செய்தியறிந்த அ க் க ம் பக்கத்தில் உள்ளவர்கள் திரண்டு வந்துவிட்டார்கள். கூட்டம் கூடு வதை மயில்வாகனன் விரும்பவில்லையென்றலும், அவர்களே அவனால் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஒவ்வொருவரும் தன்னுடைய காரில் வீ ழ் ந் த இடியைப் பற்றித் தானே விமர்சனம் செய்வார்கள் என்று அவன் கலங்கினன். சாஸ் திரத்திலும், வைதீகத்திலும் ஊறிப்போன கிராம மக்கள் ஊழ்வினைப் பயனல்தான் இடி வீழ்ந்தது என்று மனதுக் குள்ளேயாவது சொல்லிக் கொள்வார்களேயென்று அவன் வெட்கப்பட்டான்.

டாக்டரின் ஆலோசனைப்படி நாச்கியாரைத் திருச்சிக்கு கொண்டுபோய் அங்கே வைத்து சிகிச்சை செய்வது என்று அவன் தீர்மானித்தான். வாழ்க்கையின் முதல் கட்டத்தி லேயே தனக்குப் பயங்கரமான தோல்வி ஏற்பட்டதைப் போன்ற உணர்ச்சி மயில்வாகனனை ஒவ்வொரு நிமிஷமும் ஆட்டி வைத்துக் கொண்டிருந்தது. மனைவி எ ன் பவ ள் விக்ரகம்’ என்றும் அதை பாதுகாக்கும் கர்ப்பக்கிருகமாகத்’ தான் கணவன் இருக்க வேண்டும் என்றும் அவன் பல புத்த கங்களில் படித்திருக்கிருன். அ தி ல் அவனுக்கும் கருத்து வேறுபாடு எ து வும் இல்லை. ஆனல் கர்ப்பக்கிருகத்தின் மேலேயே இடிவீழ்ந்ததற்கு அவன் என்ன செய்வான்?

45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/46&oldid=698979" இலிருந்து மீள்விக்கப்பட்டது