பக்கம்:பாடகி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயில்வாகனன் நன்றாகப் படித்தவன். கல்லூரி வாழ்க் கையில் அவன் கலந்து கொள்ளாத தர்க்கங்கள் இல்லை, அவன் எப்போதும் பெண்ணுரிமைக்கு வாதாடும் பக்கமே நின்று பேசுவான். ஒரு ஆண் த ன் னு ைட ய அன்பை மனைவிக்கு மட்டும் கொடுக்கிருன். ஆனல் பெண்ணுே தன் அன்பை தனது கணவன், பிள்ளைகள், தனது தாய் மூன்று பேருக்கும் பகிர்ந்து கொடுக்கிருள். இதல்ை தான் அந்தப் பெண் துயரப்படும்போது, மூன்று பக்கங்களிலிருந்தும் அன்பு திரும்பி வருகிறது என்று கருத்தரங்குகளில் பேசி, கையொலி பெற்றவன் மயில்வாகனன். ஆனல் நாச்சியாரின் சொந்த வாழ்க்கையில் அவள் கொடுத்த அன்பை அவளால் திரும்பப் பெறுவதற்கு வாப்ப்பில்லை. பாவம், நாச்சியாருக்கு தாய் இல்லை; திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகியும், குழந் தைகள் இல்லை. அவள் புருஷனிடம் காட்டிய அன்பும் பரிவும் தான் அவளுக்கு குளிர்ந்த காற்றாக திரும்பி வீசிக் கொண்டி ருந்தது. ஆணுக இருந்தால் எல்லா இடங்களிலும் எதையும் வாய்விட்டுப்பேசி அழலாம், பெண் ணுல் முடியுமா? பாம்புக் குத் தன் மூச்சே எமனக இருப்பதைப்போல, பெண்ணுக்குச் சில நேரங்களில் அவளது அடக்கமின்மையே எமனுக வந்து விடுவதில்லையா? -

மயில்வாகனன் குடும்பத்தோடு திருச்சிக்குப் புறப் ட் டான். மாடு கன்றுகள் நீங்கலாக எல்லாமே அவனே டு திருச்சிக்குப் போய் விட்டன. பள்ளி விடுமுறை காலத்து ஹாஸ்டலைப்போல, புராதனமான அ வ ன து மாளிகை பூட்டப்பட்டது. மாளிகை வாசலிலே அலெக்சாண்டரைப் போல் நின்று கொண்டிருந்த வேப்பமரங்கள் உதிர்க்கும் இலை களைக் கூட்டிச் சுத்தம் செய்வதற்குக் கூட அங்கு ஆளில்லை. காரோட்டி, கணக்கப்பிள்ளை, பணியாட்கள் எல்லோருடைய கவனமும் நாச்சியார் பக்கமே திரும்பியிருந்தன. நாச்சியார் அந்த மாளிகைக்கு ராணியாக வந்த இரண்டு ஆண்டுகளுக் குள்ளேயே எல்லோருக்கும் தெய்வமாக விளங்கினுள். அந்த வீட்டுக்குள் நடமாடும் பணியாட்களைத் தவிர, வேறுயாரும் வெளி ஆட்கள் அவளைப் பார்த்திருக்க முடியாது. குரலை

46

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/47&oldid=698980" இலிருந்து மீள்விக்கப்பட்டது