பக்கம்:பாடகி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயர்த்திக் கூடப் பேசி அறியாதவள். தனக்காக அ வ ள் வாழ்ந்த காலம் போய் தன்னை மறந்து, தன் கணவனுக்காக வாழும் அடக்கமான பணிப் பெண்ணுகவே அவள் தன்னை மதித்துக்கொண்டாள். யாருக்கும் தீங்கு நினைக்காத நாச்சி யாருக்கு இப்படி ஒரு சோதனை ஏற்பட்டது, அந்த மாளிகை யில் அனைவருக்குமே ஒரு பெரிய ம ன க் க ல க் க த் ைத உண்டாக்கி விட்டது.

தர்மத்திற்கு ஒரு மோசமான குணம் உண்டு. யாரையும் புடம் போட்டு பார்த்த பி ன் ன ர் தான், அவனுடைய கருணையை அவர்களுக்குக்கொடுக்கும். ஆனல் அந்த சோதனை நல்லவர்களுக்கே ஏற்படுகிறது. அதர்மம் அப்படியல்ல. அது கெட்டவர்க்ளை ஊக்குவிக்கும்; வலியோர்கள் ட க் க ேம வாதாடும்; இறுதி வெற்றியைப் பற்றி அதற்கு கவலையில்லை. உற்சவமூர்த்திகளுக்குத் தீவட்டிகளாக இருப்பது தான் அதர்மத்தின் கொள்கை-நாச்சியாருக்கு ஏற்பட்ட இந்தச் சோதனைக்கும் த ர் ம. த் தி ன் திரு விளையாடல்கள்தான் காரணம.

“நாச்சியார் எனக்கு மனைவியாக வாய்ப்பாள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. எனது இடது கரம் ஊன மான பின்னும் அவள் என்னைக் கணவகை ஏற்றுக் கொள் வாள் என்று என்னல் கற்பனைக் கூடச் செய்து பார்க்க முடிய வில்லை. பெண்களே புதிர் என்கிறார்கள், இருக்கலாம். ஆளுல் எனக்குக் கிடைத்த நாச்சியார் புரியாத புதிருமல்ல. விளங் காத மந்திரமுமல்ல. குழந்தையில்லாத எனக்கு குழந்தை யாகவும், கொஞ்சுகின்ற மனேவியாகவும், பணிவிடை செய் வதில் எனக்குத் தாயாகவும் இருந்து வருகிருள். அவளுக்கு விபத்து என்றவுடன், தாய், தாரம், குழந்தைகள் அனைவரை யும் இழந்தவகை நான் தவிக்கிறேன். எனக்குச் சில நேரங் களில் ஒரு சந்தேகம் எழுவதுண்டு. நாச்சியார் குழம்பியிருப் பதற்கு இடி வீழ்ந்தது தான் உண்மையிலேயே காரணமா? அல்லது ஏற்கெனவே அவளுடைய மனம் குழம்பியிருந்ததா? இந்தச் சந்தேகம் மேகத்திரளைப் போல என் உள்ளத்தில் தோன்றித் தோன்றி மறைந்தது, உண்மைதான். எனக்கு

47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/48&oldid=698982" இலிருந்து மீள்விக்கப்பட்டது