பக்கம்:பாடகி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப்படி ஒரு சந்தேகம் ஏற்படுவதற்கு பலமான காரணம் உண்டு. அதெல்லாம் இப்போது திரும்ப நினைத்து பார்ப்பது நாச்சியாருக்கு நான் செய்யும் மாபெரும் துரோகமாகும். அவளே இவைகளை எண்ணிப் பார்க்காதபோது, நான் மட்டும் எண்ணிப்பார்ப்பது எப்படிச் சரியாகும்’-ஒவ்வொரு நாளும் மயில்வாகனன் இப்படி எண்ணுவதும் அதை அழிப் பதுமாகவும் இருந்து வந்தான்.

பிரபல மனோதத்துவ டாக்டர், நாச்சியாருக்கு சிகிச்சை செய்தார், அவர் நாச்சியார் மாதிரி எத்தனையோ நோயாளி களைக் காப்பாற்றியிருக்கிரு.ர். மருந்துகள் கொடுப்பதைவிட நேயாளிகளின் மனதைக் குளிர வைக்கும் சிகிச்சை முறை களையே அவர் கையாண்டு வந்தார்.

‘ஏன், மிஸ்டர் மயில்வாகனன்! உங்கள் மனைவிக்கு எதில் அதிகமான நாட்டம் உண்டு?’’

என்ளுேடுஉரையாடுவது, எனக்கு உணவு பரிமாறுவது -என்னை மகிழ்விப்பது-இதில் எதிலும் அவள் குறைந்தவள் அல்ல. என்னுடைய மகிழ்ச்சிதான் அவளுடைய மகிழ்ச்சி. என்னுடைய கோபத்தை அவளால் தாங்கிக் க்ொள்ளவே முடியாது. அதல்ை தான் அவளது துயரத்தை என்னல் தாங்கிக் கொள்ள முடியவில்லை.”

“நான் அதைக் கேட்கவில்லையே! உங்களுடைய மனைவி எதைப் பொழுது போக்காகக் கருதுவாள் எ ன் று கேட் கிறேன்”. டாக்டர் திரும்பக் கேட்டார்.

“எனக்காக மட்டும் அவள் பாடுவாள். நான் இல்லாத நேரத்தில் வானெலிப் பெட்டியைத் தி ரு கி வைத்துக் கொண்டு பாட்டைக் கேட்பாள். பியானே வாத்தியம் அவளுக்கு மிகவும் பிடிக்கும். எங்காவது நாட்டியக் கச்சேரி நடந்தால் நாங்கள் போவோம். எனக்கு நாட்டியம் கற்றுக் கொள்ளத்தான் ஆசை. சங்கீதப் பிரியமே இல்லாத ஒரு இராணுவ அதிகாரி எனக்குத் தந்தையாக அமைந்துவிட்ட தால், என்னுடைய எண்ணத்தை நிறைவேற்றி வைக்க விலலை. என்று நாச்சியார் பலமுறை சொல்லியிருக்கிருள்.

48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/49&oldid=698983" இலிருந்து மீள்விக்கப்பட்டது