பக்கம்:பாடகி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுக்கோட்டை அரண்மனையில் அடிக்கடி சங்கீத கச்சேரிகள் நடப்பதுண்டு. ஒன்றையும் நாங்கள் விட்டு வைப்பதில்லை. புதுக்கோட்டை அரச குடும்பம் எனக்கு மிகவும் வேண்டிய குடும்பம். நான் குடும்பத்தோடு வருவதைப் பார்த்தால் எனக்கு சளைக்காமல் உபசரணை செய்வார்கள். நான் அடிக்கடி விழாக்களுக்குப் போய் வந் த த ா ல் மகாராணிக்கும் என் மனைவிக்கும் நட்புறவு ஏற்பட்டுவிட்டது.” என்று மயில் வாகனன் டாக்டரிடத்தில் விரிவாகச் சொன்னன்.

அப்படியால்ை உங்களுடைய திருமணத்திற்குப் பிறகு உங்களுடைய மனைவிக்கு எந்தவிதமான மனச்சஞ்சலமும் ஏற்பட்டதில்லையல்லவா?” -

‘என்னுல் உறுதியாகச்சொல்ல முடியும். அவளுக்கு எந்த மனக்குறையையும் நா ன் வைத்ததில்லை. அவள் முகம் என்றும் நிலவுபோலவே இருக்கும். மனங்கமழும் ஊதுவத்தி யின் வாசனையும், இனிய வாத்திய இசையுமே அவளுடைய அறையில் நீ க் க ம ற நிறைந்திருந்தன’ என்றான் மயில்

வாகனன்.

மயில்வாகனன் பேச்சைக் கே ட் டு க் கொண்டிருந்த டாக்டர் ஏ தோ யோசித்துவிட்டு, ‘நாச்சியாருக்குச் சிகிச்சை செய்வதற்கு திருச்சி உகந்த இடமில்லை. திருச்சி கந்தக பூமி. குளிர்ந்த வாசஸ்தலமே அவளுடைய மனக் கலக்கத்திற்கு மூலிகையாக அமைய வேண்டும். அதுதான் அவளுக்கு முதல் கட்டச் சிகிச்சை. அடுத்தபடியாகச் செய்ய வேண்டியதை நான் பிறகு சொல்லுகிறேன்’ எ ன் ரு ர் டாக்டர். -

மயில்வாகனனுக்கு இதைக் கேட்டு மேலும் மனச் சோர்வு ஏற்பட்டது, நாச்சியார் சுயநினைவு திரும்பப் பெருமலே போய் விடுவாளோ என்று கூட அவன் நினைத்த துண்டு. -

மயில்வாகனன் ஊழ்வினையில் நம்பிக்கையில்லாதவன். முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களுக்கு இந்த ஜென்மத்தில் தான் தீர்ப்புக் கிடைக்கிறது என்பதெல்லாம்

49

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/50&oldid=698985" இலிருந்து மீள்விக்கப்பட்டது