பக்கம்:பாடகி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைத்தியக்காரத் தனமான மூட நம்பிக்கைகள் என்பது அவனுடைய வாதம். செய்தவரின் வினை செய்தவரோடே முடிந்துவிட வேண்டும்; அதுவே கட்டாயமான நீதியின் தீர்ப்பாக இருக்க வேண்டும் என்பதே அவனுடைய விருப்பம். இந்த கொள்கை அவனையே இப்பொழுது இடித்துக் காட்டிக் கொண்டிருந்தது. மயில்வாகனன் வேதனைப்பட்டுக் கொண்டி ருப்பது முன் ஜென்மத்தில் செய்த பாவங்களுக்காகத்தான் என்றால் அவன் நம்பமாட்டான். செய்தார் வினை செய்த வரோடு என்ற கொள்கைப்படி என்றாலும் அவன் யாருக்கோ தீவினை செய்திருக்கிருன் என்றாகிறதல்லவா!

சிந்திக்கத் .ெ த ரி ந் த மனிதனுக்கு மனம் குழம்பிக் கொண்டேயிருக்கிறது. சிந்திக்கத் தெரியாதவர்கள் சரியோ த வ ருே முரட்டுத்தனமாகச் சில காரியங்களில் ஈடுபட்டு விடுகிறார்கள். சில நேரங்களில் வெற்றியும் பெற்று விடுகிருச் கள். அவர்கள் அதிர்ஷ்டசாலி என்று அழைக்கப்படுகிறார்கள். தோற்றுப்போய் விட்டால், அவர்களுக்கு முட்டாள் பட்டம் கிடைக்கிறது. இந்தவகையில் மயில்வாகனன் சிந்திக்கப் பழகியது, ஒரு குற்றமாகவே ஆகிவிட்டது. இல்லாவிட்டால் அவன் மனைவிக்கு ஏற்பட்ட துன்பத்தை நினைத்து நினைத்து அடிக்கடி மனம் குழம்பிக் கொண்டிருப்பான?

டாக்டரின் உத்தரவுப்படி மயில்வாகனன், நாச்சியாரை கொடைக்கானலுக்கு அழைத்துச் சென்றான். அரண்மனை போன்ற ஒரு பெரிய வீ ட் ைட வாடகைக்கு அமர்த்தி நாச்சியாரை அங்கு வைத்து சிகிச்சை செய்யத் தொடங்கி ஞன். இதமான இடமே அவளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை குணப்படுத்த முடியும் என்று டாக்டர் கூறியதால், மலைச் சரிவில் உள்ள மல்லிகையும், முல்லையும், மலர்ந்த ரோஜாவும் மணம் வீசும் அந்த மாளிகையில், நாச்சியார் ஒரு சாய்வு நாற்காலியில் சாய்ந்படி படுத்துக்கொண்டே நேரத்தைப் போக்கிளுள். -

50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/51&oldid=698986" இலிருந்து மீள்விக்கப்பட்டது