பக்கம்:பாடகி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாச்சியாருக்கு சி கி ச் ைச செய்ய ஏற்பாடு செய்திருந்த டாக்டர் இராஜ சேகரன் ஒரு பெரிய மனோதத்துவ நிபுணர். புத்தகப்படிப்பினுல் மட்டும் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் அல்ல. தானே சிந்தித்து கற்பனையான மருத்துவ முறைகளைக் கண்டுபிடித்து முன்னேறியவர். காஷ்மீரில் ஒரு பெரிய ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளவரசனுக்கு இதுபோன்ற மூளை அதிர்ச்சி ஏற்பட்டு இருந்தது. அந்தக் குடும்பத்தினர் அவனைக் காப்பாற்ற எவ்வளவோ முயற்சித்துப் பார்த்தனர். பொன்னையும், பொருளையும் வாரி இறைத்து அயல்நாடுகளில் இருந்தெல்லாம் மருத்துவரை அழைத்துவந்து பார்த்தனர். அவர்களுக்கு பயன் எதுவும் கிடைக்கவில்லை. இறுதியாக அவர் கள் தமிழ்நாட்டு மருத்துவ முறையில் தான், தங்களுடைய பிள்ளையை இ ள வ ர ச ஞ க மீண்டும் பார்த்தார்கள். அதே மருத்துவ முறையை நாச்சியாருக்குப் பின்பற்ற டாக்டர் தீர்மானித்தார். -

‘மனிதனுக்குப் பசி ஒரு உணர்ச்சி, பூக்களின் நறுமணம் ஒரு உணர்ச்சி, ரஞ்சிதமான இசை ஒரு உணர்ச்சி, இவைகளில் எந்த உணர்ச்சியைத் துண்டினல், ஸ்தம்பித்துப் போய் நிற்கும் நாச்சியாரின் மூளையை கலைக்கலாம்’ என்பதிலேயே டாக்டரின் சிந்தனை தீவிரமாகச் சுழன்று கொண்டிருந்தது. ‘டாக்டர் சார், நாச்சியாரின் உடல் நிலையில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட் டிருக்கிறதா’- மயில்வாகனன் கேட்டான். எல்லா டாகடர் களுக்கும் உள்ள நம்பிக்கையின் அடிப்படையிலேயே நான் முயற்சி செய்கிறேன். என்னுல் முடியும் என்றே நம்புகிறேன். உங்கள் நிலை என் மனதைப் பெரிதும் வாட்டியிருக்கிறது. உங் களைப் போன்ற புருஷனைப் பெற்றதில் நாச்சியார் பாக்கிய சாலிதான். இதுமாதிரி பணிகளை தொழில்முறையில் செய்வதை விட ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் நிம்மதிக்கு செய்கின்ற பேருதவியாகத்தான் நான் கருதுகிறேன்.”

‘டாக்டர் நாச்சியாரை ஒரே ஒரு p வ ன் தா ன் என்று நீங்கள் கருதிவிட வேண்டாம். அவளுக்காக நான் இருக்கிறேன் என்னைச் சுற்றி ஒரு சிறிய சமஸ்தானமே இருக்கிறது. அவளுக்கு

51

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/52&oldid=698987" இலிருந்து மீள்விக்கப்பட்டது