பக்கம்:பாடகி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏதாவது ஒன்று வந்து விட்டால் என்னுடைய சமஸ்தானமே அஸ்தமித்து விடும். அதனால் தான் அவளே ஒரே ஒரு ஜீவன் என்று எண்ணிவிடக்கூடாது என்றேன்’-மயில்வாகனன் குரலில் நீர்ப்பின்னி இருந்தது டாக்டர் ஊருக்குப் போய்விட்டுத் திங்கட்கிழமைக்குள் முடிவு சொல்லி விடுவதாகச் சொல்லிச் சென்றார்.

மயில்வாகனனுக்குக் குழப்பம் நீங்கவில்லை. மன அழுத்தம் கை அழுத்தம் இல்லாத செல்லப் பிள்ளேயாக வளர்ந்தவன் மயில்வாகனன். இலேசான காற்று வீசினலும் உதிரும் பன்னீர் பூக்களைப் போல, சிறிய துன்பங்களைக் கூடத்தாங்க முடியாமல் கண்கலங்கி விடும் சுபாவம் உடையவன். விருப்பமான மனைவி எதிர்பாராமல் கிடைத்தும், அவளோடு வாழ முடியவில்லையே என்ற ஏக்கம் அவனை ஒவ்வொரு நாளும் குடைந்து கொண்டே யிருந்தது. அவனுக்குப் பசி எடுக்கவில்லை. ஆனல் நாச்சியாரை காப்பாற்றுவதற்காகவாவது வாழ வேண்டுமே என்பதற்காகச் சாப்பிட்டான். மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து வர்ணம் தேய்ந்த ஒவியத்தைப்போல் அவனுடைய தோற்றம் பொலி விழந்து கொண்டு வந்தது, தினசரி முகச்சவரம் செய்யும் பழக் கத்தில் இருந்த அவன், இப்பொழுது வாரத்திற்கு ஒரு முறை அல்லது பத்து நாட்களுக்கு ஒருமுறை, முகச்சவரம் செய்து கொண்டான். அவன் குளியலறைக்குப் போனல் ஒருமணி நேரம் குளிப்பான். தலைமுடிக்கு ஷாம்பூ போடுவதிலிருந்து, குதிக்காலை தேய்த்து கழுவுதுவரை அவசரமில்லாமல் குளிப் பான். மல்லிகைப் பூவின்மீது அவனுக்கு அளவுகடந்த பிரியம். மனைவிக்கு மல்லிகைப்பூவும் தனக்கு மல்லிகைப்பூச் சோப்பும் வாங்கிக் கொள்வான். வர்ண ஜாலங்கள் நிறைந்த பூக்களில் வாசனை இருப்பதுகூட ஆச்சரியமில்லை. பால் போன்ற வெண் மையான மல்லிகைப்பூவிற்கு எங்கிருந்தோ மணம்வருகின்றதே என்று நாச்சியாரிடத்தில் பலமுறை மலர்களைப்பற்றி விமர்சித் திருக்கிருன். அதனுல் தான் மல்லிகைப்பூ சோப்பு என்றால் அவ னுக்கு அலாதியானபற்று. பாவம் இப்பொழுது மயில்வாகனன் அந்தச் சோப்புப்போடும் பழக்கத்தையே மறந்துவிட்டான். முன்னைப்போல ஒருமணி நேரம் குளியலறையில் இருந்தால்

52

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/53&oldid=698988" இலிருந்து மீள்விக்கப்பட்டது