பக்கம்:பாடகி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாச்சியாரைக் கவனித்துக் கொள்ளமுடியுமா என்று அவன் பெருமூச்சுவிட்டான்.

கால் சட்டைக்குத் தகுந்த பூட்ஸ் அணிவது அவனுடைய பழக்கம். இப்போது பூட்ஸ் போடும் பழக்கத்தையே கை விட்டு விட்டான். நாச்சியார் படுக்க ஆரம்பித்ததிலிருந்து நாலு முழ வேஷ்டியும், ஒரு சாதாரண மிதியடியும் அணிந்துகொண்டான். யாராவது அவனுடைய உறவினர்கள் அவனிடம் வந்து ஏன் இப்படி உடம்பை அலட்டிக் கொள்ளுகிறாய், நீ உன்னைக் கவ னித்துக் கொண்டால்தானே உன்னல் நாச்சியாரைக்கவனித்து கொள்ளமுடியும், என்று அவனைக் கே ட் பார் க ள். அதற்கு உடனே அவன் “நீ, நாச்சியார் என்று எங்களைப் பிரித்துப் பேசு கிறீர்கள். நான்வேறு, அவள்வேறு இல்லை. அதனல்தான் அவளை பிடித்த துன்பம் எ ன் னை யு ம் சாடியிருக்கிறது. கையிலோ, காலிலோ மனிதனுக்குப் புண் வந்தால் இடுப்பிலும், கக்கத் திலும் நெறி கட்டுகிறது அல்லவா, அது மாதிரிதான் நானும் அவளும் ஒரே உ ட ம் பு அவளுக்குப் புண் வந்திருக்கிறது, எனக்கு நெறி கட்டியிருக்கிறது’ என்பான். -

விடிந்தால் திங்கட்கிழமை. காலேயில் டாக்டர் வந்து விடு வார் என்று ஆவலோடு அவன் இருந்தான். நல்ல சேதியோடு தான் டாக்டர் வருவார் என்று அவன் நம்பியிருந்தான். ஆனல் நடந்தது வேருகிவிட்டது, டாக்டருக்குப் பதிலாக அவர், அவ ருடைய உதவியாளரை அனுப்பியிருந்தார். அந்த உதவியாளர் டாக்டரின் கடிதத்தை மயில்வாகனனிடம் கொடுத்தார். அதில்,

அன்புள்ள மயில்வாகனன்,

“நான் நாளைக்குத்தான் வருவதாகத் தங்களிடம் சொன் னேன். ஆனல் நாளை வரை தாமதிக்க மனம் இல்லாததால் இன்றைக்கே கடிதத்தை அனுப்பியிருக்கிறேன். நீங்கள் எதற் கும் அதைரியப்படக் கூடாது. தீயவை செய்யத்தான் அஞ்ச வேண்டும். நல்லது செய்யத் துணிவு தான் வேண்டும். துணிவு ஒரு வகையான மருந்து. அந்த மருந்து மாத்திரைகளிலோ, காவியத்திலோ இல்லை. அது மனத்திலேதான் இருக்கிறது.

53

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/54&oldid=698989" இலிருந்து மீள்விக்கப்பட்டது