பக்கம்:பாடகி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"நாச்சியாருக்குச் சிகிக்சை செய்ய நான் பயப்படுகிறேன். என்னல் எல்லாம் முடியுமென்று பிதற்றுவதைவிட, என்னுல் முடியாததை வெளிப்படையாகச் சொல்லிவிடுவதும் ஒரு வகை யான திறமை என்று நான் நினைக்கின்றேன். இந்த வியாதி உங் களுக்கு வந்திருந்தால் நான் துணிச்சலாக சிகிச்சையளிக்க முடி யும். நாச்சியார் பெண்ணுகயிருப்பதால் நான் கொஞ்சம் கூச்சப் படுகிறேன். என்னைப் போல என்னுடைய சிகிச்சை முறையில் வெற்றி கண்ட ஒரு லேடி டாக்டரை அழைத்து வந்து சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்வதே .ெ பா ரு த் த ம் என்று எனக்குத் தோன்றுகிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் உயிர் ஒன்றாக இருந்தாலும், உடல் உறுப்புகளின் குனதிசயங்கள் மாறுபடு கின்றன. ஒரு உடலுக்குள் புகுந்து விளேயாடும் வியாதி அந்த உடலின் குணத்தைப் பொறுத்தே அடங்குகிறது. ஆகையால் பெண்மையின் குணத்தை அறிந்த இன்னொரு பெண்ணை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வது மிகவும் முக்கியம். நான் எங்கே போய் இதற்கு தகுந்த லேடி டாக்டரைக் கண்டுபிடிக்க முடியு மென்று நீங்கள் விசனப்பட வேண்டாம். இந்த வியாதியைத் தீர்ப்பதில் மகத்தான வெற்றி பெற்றவள், டாக்டர் கோகிலா என்ற தமிழ் பெண்மணிதான். அவள் இப்பொழுது பெங்க ளுரில், மல்லீஸ்வரம் பகுதியில் சொந்தத்தில் மருத்துவமனை வைத்துக் கொண்டு இருக்கிருள். அ வ ளை த் தவிர, இந்த வியாதியைக் குணப்படுத்துவதற்கு பிரிதொருவர் கிடைப்பது அரிது. அதற்குரிய ஏற்பாட்டை செய்து கொள்வீர்கள், என்று நம்புகிறேன். இதுவே தக்க தருணம்’.

இப்படிக்கு, ராஜசேகர்

இந்தக் கடிதத்தைப் படிக்கும் பொழுதே மயில்வாகனன் கண்களிலிருந்து மாலை மாலையாகக் கண்ணிர் வடிந்தது.

மறுநாளே அவன் பெங்களுருக்கு புறப்படத்தயாரானன்.

54

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/55&oldid=698990" இலிருந்து மீள்விக்கப்பட்டது