பக்கம்:பாடகி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1

உட்பிரகாரம்

நாச்சியார் பேசுகிருள்.

என்னைப்பற்றி ம ற் ற வர் க ள் கூறுவதைவிட, நானே கூறுவது தான் நல்லது.

பெண்களைத் தெய்வம் என்கிறார்கள். இன்னும் சிலர் தெய் வத்தின் தெய்வம் என்று கூட வர்ணிக்கிரு.ர்கள். இதெல்லாம் ஆடவர்கள் புரியும் திருவிளையாடல்களே மனேவிமார்கள் தட்டி கேட்கக் கூடாது என்பதற்காகப் பேசப்படும் முகஸ்துதிகள். பொறுமைசாலிகளும், வாயில்லாப் பூச்சிகளும் தெய்வங்கள் என்றால், எங்களை விட, எருமை மாடுகள் அடியையும், மிதியை யும் வாங்கிக் கொண்டு எவ்வளவோ பொறுமையாக இருக் கின்றன; அவைகளை என்னவென்று வர்ணிப்பது? மங்கையர்க் கரசி, மகாலக்ஷ்மி என்று அழைத்துவிடுவதா?

மேஜர் காசிநாத் இரண்டாவது உலகப் போரில் கடும் போர் புரிந்து, பல பதக்கங்களைத் தட்டிக் கொண்டவர். கம்பீர மான உருவம்! எடுப்பான தோற்றம். ஆனால் அவரது உள்ளத் தில் இங்கிதமோ, கலை உணர்ச்சியோ சிறிதும் இல்லை. எடுத்த

எடுப்பிலேயே எ த ற் கு ம் கோபப் பட்டுவிடுவார். அவர்

கோபமாக இருக்கும்போது, அவர் எதிரில் என்ன இருந்தாலும் அதைத் தூக்கி முகத்தில் அடித்துவிடுவார். முன்கோபிகளுக்கு முகத்தில் களே இருக்காது என்பதற்கு மேஜர் காசிநாத் ஒருவர் போதும் உதாரணத்திற்கு! மேஜரைப்பற்றி உனக்கு இவ்வளவு தெரியக் காரணம் என்ன என்று கேட்கிறீர்களா? ஒரு மகளுக்கு

55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/56&oldid=698991" இலிருந்து மீள்விக்கப்பட்டது