பக்கம்:பாடகி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவளுடைய தந்தையைப் பற்றி தெரியாமல் இருக்குமா? ஆம்! மேஜர் காசிநாத் தான் என் தந்தை,

மேஜருக்கு நான் ஒரே மகள். எனக்கு முன்னலும் பிள்ளை இல்லை. பின்னலும் பிள்ளை இல்லை. மேஜர், அவர் வாழ்நாளில் முக்கால் பகு தி யை அயல் நாட்டிலேயே கழித்துவிட்டார். அவருக்கு கலியாணம் ஆன புதிதில் என் தாயார் கருவுற்றிருக் கிருள். அதற்குப் பிறகு மு ைற யா ன இல்லற வாழ்க்கை அவளுக்கு இல்லாமல் போய்விட்டது. படையெடுப்பு, குண்டு வீச்சு, முற்றுகை, வெற்றிகர வாபஸ் இவைகளே என் தந்தையின் கனவுகளாகவும் நினைவுகளாகவும் ஆகிவிட்டன ஒரு மனிதனின் மனதை, அவனது மனைவியும் குழந்தைகளுமே பக்குவப்படுத்த முடியுமே தவிர, துப்பாக்கிகளாலும், வெடிமருந்துகளாலும் ஆகக்கூடியதா? -

என் தந்தையை மற்ற வீ ட் டு ப் பிள்ளைகளைப் போல் நான் ஆண் டு தோறும் பார்த்ததில்லை. எனது ஐந்தாவது வயதில் ஒரு முறையும், பனிரெண்டாவது வயதில் ஒரு முறை யும் பார்த்திருக்கிறேன். அதற்குப் பிறகு அவர் ரிட்டையர் ஆன பிறகுதான் பார்த்தேன். -

ஒரு பெண்ணுக்கு என்ன தான் செ ல் வ ம் இருந்தாலும் புருஷனின் பரிச்சயமும் பிணைப்பும் இல்லாவிட்டால், அவள் வெறும் கூடாகிவிடுகிருள். சுட்ட கத் தரிக்காயை போல் அவள் இதயம் சூம்பிப் போய் விடுகிறது என் அன்னயாருக்கும் இதே கதிதான். அவள் கழுத்து நிறைய நகைகள் இருந்தன. பெட்டி நிறையப் பட்டுப் புடவைகள் இருந்தன. ஆனால் அவள் மனம் மட்டும், நடந்து முடிந்த நா ட க க் கொட்டகையைப் போல வெறிச்சோடிக் கிடந்தது. பாவம் எவ்வளவு நாளைக்குத்தான் அவள் மனம் தாங்கும்! ஆளையேக் கொல்லும் துப்பாக்கிக்கூட கவனிப்பாரற்றுப் போனல், துருப்பிடித்து பலமிழந்து போய் விடுகிறதே! விரக்தியும், சலிப்பும், தனது அழகைப் பருக ஆளில்லாததால் ஏற்பட்ட ஏமாற்றமும், என் அன்னையைக் காச நோய்க்கு ஆளாக்கிவிட்டது. கொஞ்ச நாளில் அது

56

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/57&oldid=698992" இலிருந்து மீள்விக்கப்பட்டது