பக்கம்:பாடகி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள் உயிரையே விழுங்கிவிட்டது. நான் மலர்ந்து இன்னொரு வீட்டுக்கு விளக்காகும் பருவம் பெற்ற காலத்தில் எங்கள் வீட்டுக் காந்தவிளக்கு அணைந்துவிட்டது. புருஷன் வீட்டுக்குப் போன பிறகு வரவேண்டிய பொறுப்புக்களெல்லாம் எனக்கு தாய் வீட்டிலேயே வந்துவிட்டன.

என் தந்தை ராணுவத்தளபதியாகையால், அரசாங்கத்தின் எல்லாச் சலுகைகளும் எனக்குக் கிடைத்தன. உடை வசதிகள், உபகாரச் சம்பளம் எது கேட்டாலும் அரசாங்கம் தரத் தயா ராக இருந்தது. தனிமையில் இருப்பது முறையல்ல என்று தீர்மானித்து நான் ஹாஸ்டலில் சேர்ந்து படிக்கத் தொடங்கி னேன். எங்கள் வீடு பூட்டியே கிடந்தது. என் தந்தை உயிரோடு இருக்கிறார் என்பதற்கு அடையாளமாக, எப்போதாவது மூன்று மாதத்திற்கு ஒருமுறை பர்மாவிலிருந்தும், சிங்கப்பூரிலிருந்தும் ஈரான் ஈராக்கிலிருந்தும் கடிதங்கள் வரும். அந்தக கடிதங்களில் கூட பாசம் அன்பு எதுவும் காணப்படாது. குண்டு வீச்சைப் பற்றியும், பற்றி எரிந்த தலைநகரங்களைப்பற்றியும், அதில் சாம்ப லான குடும்பங்களைப் பற்றியும்தான் எழுதியிருப்பார், என் தந்தையின் கடிதத்தைப் படிக்கும்போது, ஏதோ ஒரு கிராமத் தில் உட்கார்ந்து சண்டைப்படம் பார்ப்பதைப் போலவே

இருக்கும்.

நான் பி. ஏ. வகுப்பிற்கு வந்துவிட்டேன். என் கவனமெல் லாம் படிப்பிலேயே லயித்து விட்டன. ஒவ்வொரு பரிட்சை யிலும் நான்தான் முதல் மார்க் வாங்குவேன். என்னை ஒட்டியும் சில நேரங்களில், என்னை மிஞ்சியும் கருணையானந்தம் மார்ச்கு வாங்கிக்கொண்டு வந்தார். கருணையானந்தம் தமிழாசிரியரின் மகன். அவர் சிறந்த சொற்பொழிவாளர்; ஆங்கிலப் பேச்சும். தமிழ் பேச்சும் அவருக்குக் கைவந்த கலேகள். எளிமையான தோற்றமுடையவர். தும்பைப் பூவைப் போன்ற வெண்மை - யான கதராடையைத் தான் அவர் உடுத்துவார். சூட்டும்கோட் டும் போட்டு வந்தால் அவையும் கதராகத்தான் இருக்கும்.

கருணையானந்தம் அவரது தந்தையைப் போலவே தமிழ்த் துறையில் வல்லுநராக வளர்ந்து வந்தார். எங்கள் கல்லூரியில்

57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/58&oldid=698993" இலிருந்து மீள்விக்கப்பட்டது