பக்கம்:பாடகி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடைபெற்ற இலக்கிய திறனாய்வுகளில் அவரை மிஞ்சி யாரும் வெற்றி கொண்டதில்லை.

ஒவ்வொரு ஆண்டும் பரிசு பெற்றேரின் பட்டியலைப் படிக் கும் போதெல்லாம், நாச்சியார், கருணையானந்தம் என்ற இரண்டு பெயர்களும் முன்னும் பின்னுமாக இ ன ந் து ம், பிணைந்துவந்து கொண்டேயிருக்கும். அப்படிப்பட்ட கட்டங் களில் கல்லூரிப் பேரவையில் கையொலியும், ஆரவாரமும் கேவிச்சிரிப்பும், நையாண்டிப் பேச்சும் கதம்பக் கச்சேரியாக எழுந்து அடங்கும். நாலாண்டுகள் தொடர்ச்சியாக ஏற்பட்ட இந்த அனுபவங்கள் எங்களுக்குள்ளே ஒரு அனுமானத்தை விதைத்து விட்டது. அனுமானங்களும், உணர்வுகளும் நிகழ்ச்சி களால் வடிவம் பெறுகின்றதே தவிர கற்பனைகளால் அல்ல. அதற்கு நாங்களே சாட்சிகளாக இருக்கிருேம்.

எனக்கும் அவருக்கும் இடையில் கண்களுக்குப் புலப்படாத நீரோட்டம் போன்ற ஒரு தொடர்பு உருவாகுமென நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. அவர் யாரோ, நான் யாரோ என்றிருந்த என் உள்ளத்தில் அவர் அடிக்கடி முகங்காட்டி புன்னகை செய்யத் தொடங்கினர். எதையும் எளிதில் வெளிக் காட்டாமல், புதையலைப் போல மனதை அடக்கிக் கொண் டிருக்கும் எனக்கே, அந்தப்பாடு என்றால் இலக்கியத்திலும் அவற்றில் வரும் இன்பக் கூத்துகளிலும் மனதை அடிக்கடி வேட்டையாட விடும் அவருக்கு எப்படியிருக்கும்! எப்படியோ ஒருவர் நெஞ்சில் ஒருவர் புகுந்து கற்பூரமாக மணம் வீசத் தொடங்கிவிட்டோம்.

கள்ளத்தனமான சந்திப்புக்கள் ஏற்பட்டன. கலித்தொகை காட்சிகளுக்கு ஒத்திகைகள் நடந்தேறின. இந்த ரகசியம் எத்தனை நாளைக்கு நிலைக்கும்! இரண்டு காதல் மனங்களின் மாயத் தொடர்பையே துப்புத் துலக்கி விடுகின்ற கூர்மையுள்ள மனித உள்ளத்திற்கு சந்தன மரங்கள் போன்ற உருவங்கள் சந்தித்துப் பேசுவதைக்கண்டு பிடிப்பது கடினமான காரியமாகி விடுமா? அவ்வளவுதான். கல்லூரிச் சுவர்கள் எங்கள் காதல்

58

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/59&oldid=698994" இலிருந்து மீள்விக்கப்பட்டது