பக்கம்:பாடகி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைகள் கூறும் சுவடிகளாகிவிட்டன. பொருமைப் பேச்சுக்கள் வெடித்துக் கிளம்பின. பருவக்காற்றின் மோதலால் உருவாகும் மேகத்திரள்தான் காதல் என்பது என்று பேசித் திரிந்த கருணையானந்தம் கூட ைம ய லி ல் சிக்கிக் கொண்டானே! நாச்சியாரின் தகப்பனரோ ஒரு ராணுவ தளபதி. அவரோ கடுங்கோபி. அவருக்குத் தெரிந்தால் இவன் கதி என்னவாகும்? ஒரே தோட்டாவில் கருணையானந்தத்தைக் காலி செய்து விட்டுப் போய்விடுவாரே, என்று அவருக்காக பச்சாதாபப் படாத பேராசிரியர்களே இல்லை. என் தந்தையைப் பற்றி அவருக்கு அச்சுறுத்தியது ஒன்றும் தவறில்லை. நூற்றுக்கு நூறு உண்மைதான். அதற்காக நாங்கள் சந்திப்பையோ, உறவு களையோ துண்டித்துக் கொண்டு விட முடியுமா? எங்கள் காதல் வெறும் புறத்தோற்றத்தினல் மட்டும் உருவானதாக இருந் திருந்தால், எங்களில் யாராவது ஒருவர் சிணுங்கிக் கொண்டு ஒதுங்கியிருப்போம். எங்கள் நேசம் அறிவுப் போட்டியால் ஏற் பட்டதால், ஒவ்வொரு நாளும் எங்கள் நெருக்கம் இறுகிக் கொண்டே வந்தது.

என் தந்தை ரிட்டையர் ஆகிவிட்டார். அவர் சென்னைக்கு வந்து அங்கு பூட்டிக் கிடந்த எங்கள் வீட்டிலேயே வாசம் செய்யத் தொடங்கினர். ஆனால் அ வ ர் பெண்ணில்லாத வீட்டில் குடியிருந்தது எனக்கு வியப்பளிக்கவில்லை. ஏனென்றால் அவர் வாழ்நாள் முழுவதையுமே அப்படித் தானே கழித்திருக் கிறார்? எடுப்புச் சாப்பாடும் ஏகாந்த வாழ்க்கையும் வீடு வாசல் இல்லாத தனி மனிதனுக்கு இ த மா. க இருக்கலாம். ஆனல் பளிங்குச் சிலபோன்ற ஒரு பெண்ணையும், மாளிகை போன்ற ஒரு வீட்டையும், வைத்துக் கொண்டு ஒண்டியாக இருப்பதைப் போன்ற கொடிய தண்டனை வேறு எதுவும் இருக்க முடியாது தான், என்ன செய்வது? என் தந்தையோ முன்னேயும் பின்னே யும் சிந்திக்க விரும்பாத முரட்டு சுபாவம் கொண்டவராயிற்றே ஒரு வயோதிக உள்ளத்தை இலக்கிய ரசனை பக்குவப்படுத்த லாம். அல்லது பேரப் பிள்ளைகள் பக்குவப்படுத்தலாம். என் தந்தைக்கு இந்த இரண்டுமே இல்லை! இந்த இரண்டும் இல்லாத

59

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/60&oldid=698996" இலிருந்து மீள்விக்கப்பட்டது