பக்கம்:பாடகி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வர்களுக்கு பூக்களின் மீது வெறுப்பு ஏற்பட்டால் கூட ஆச்சரிய மில்லைதான். -

இவ்வளவு கடினமான சித்தம் கொண்டவருக்கும் கோபம் வந்து விட்டால் எப்படி இருக்குமென்று வர்ணிக்க முடியுமா? அது வந்துவிட்டது ஒருநாள். .

எனக்கும் கருணையானந்தத்திற்கும் இருந்த உறவு என் தந்தைக்கு எப்படியோ தெரிந்து விட்டது. ஒருநாள் அவர் என்னை ஹாஸ்டலிலிருந்து வீட்டிற்கு வரவழைத்தார். அவரது நெற்றி நரம்புகள் புடைத்திருந்தன. நான் உள்ளே நுழைந் ததும் குற்றவாளியைப் பார்க்கும் போலீஸ் அதிகாரியைப் போல் வெறித்துப் பார்த்தார்.

‘எனக்கு ஆண் குழந்தையில்லை என்று கவலைப்படுவதை விட, எனக்கு குழந்தையே பிறக்கவில்லை என்று நான் தீர்மா னித்துக் கொள்வது மேலானது. உன்னைவிட நான் என் ஆயுதங் களே நேசிக்கிறவன். உன்னை நான் ஒருபோதும் தோளில் சுமந்த தில்லை. என்னுடைய ஆயுதங்களைத்தான் தி ன ந் தோறும் தோளில் சுமந்திருக்கிறேன். அதுதான் எனக்கு மூத்தப்பிள்ளை. அதற்குப் பிறகுதான் எனக்கு மற்றவர்கள். நான் 15 ஆண்டு காலமாக கர்னலாக வேலை பார்த்தேன். என்னை யாரும் நிமிர்ந்து பார்த்ததில்லை. அதிகார வர்க்கத்தில் எவனொருவன் அவனது சகபாடிகளின் அலட்சிய பார்வைக்கு ஆளாகி விட்டானே, அன்றாேடு அந்த அதிகாரிக்கு தெம்பும் உணர்ச்சியும் அழிந்து போய்விடும். உத்தியோகத் துறையில் நான் இதைக் கற்றுத் தெரிந்தவன். ஆனல் வீரம் மிகுந்த ஒரு பட்டாளத்திலிருந்தே உயிர் பிழைத்த என்னை நீ அவமானப்படுத்திவிட்டாய்” என்று அவர் அனலைப் பொழிந்து கொண்டிருந்தார்.

60

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/61&oldid=698997" இலிருந்து மீள்விக்கப்பட்டது