பக்கம்:பாடகி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் பதில் ஒன்றும் சொல்லவில்லை. மனிதனின் கோபம் இருபுறமும் பதமுள்ள கத்தியைப் போன்றது. கோபக்காரர் களில் சிலர், எதிர்த்துப்பேசினல் எகிறிக் குதிப்பார்கள். தாழ்ந்து பேசினால் தரையில் போட்டு மிதிப்பார்கள். இதில் என் அப்பா எந்த வகையைச் சேர்ந்தவர் என்று எனக்கு தெரியவில்லை. அவரும் நானும் நெருங்கிப் பழகியிருந்தால் அல்லவா, அவரு டைய குணம் எனக்கு தெரிந்திருக்கும்.

‘நீ ஒரு கர்னலின் மகளல்ல நீ அப்படி நடந்து கொள்ள வில்லை. பூச்சிக் கத்தரிக்காய் வியாபாரம் செய்யும் ஒரு பட்டிக் காட்டுப் பெண்ணைப் போலவே நடந்து கொண்டு விட்டாய். நான் ஒரு வேலையில்லாத சீர்திருத்தவாதியாக இருந்தால் நீ நினைக்கின்றவனே உனக்குப் புருஷனுக ஆக்கி வைக்கலாம். நான் ஒரு அதிகாரி இளமையிலிருந்தே அதிகார போதையில் மிதந்து ஊறிப் போனவன். எனக்குச் சமத்துவம், சகோதரத்துவம் என்பவையெல்லாம் பிடிக்காதவை. சாஸ்திரங்கள் எப்படி உத வாதவையோ, அப்படித்தான் சீர்திருத்தங்களும் உதவாதவை யென்று கருதுபவன் நான். காளான் எப்படி வேகமாக முளைத்து கருகிவிடுகிறதோ அதுபோலத்தான் கா த லும் வேகமாகத் தோன்றி அழிந்து விடக்கூடியது. ஆனல் பெற்றேர்கள் பார்த்து வைக்கும் திருமணம் அப்படிப்பட்டதல்ல. ஒரு விவசாயி விளைச் சலுக்கு முன்னல் நிலத்தை எப்படி பக்குவப் படுத்துகிருனே: அதுபோலத்தான் பெற்றாேர்களும் மகளுக்கு மாப்பிள்ளைப் பார்க்கிறார்கள். கர்னல் இப்படிக் கர்ஜித்தார்.

என் தந்தை இந்த யுகத்திற்குப் பிடிக்காத பேச்சுக்களைப் பேசிக் கொண்டிருக்கிறார். என்னிடமிருந்து எவையாவது அவர் எதிர்ப்பார்த்திருக்கக் கூடும். எதை நினைத்து அவர் இப்படிப் பேசுகிறார் என்பதை அறிந்து கொள்ளுமுன், நான் குறுக்கிடுவது புத்திசாலித்தனமாகாது என்று நான் தீர்மானித்துக் கொண் டேன்.

‘'நீ விவரம் தெரியாத பெண். வருங்காலமே இல்லாத ஒரு வரட்டுத் தமிழ் வாத்தியாரின் மகனிடத்தில் மனதைப் பறி

61

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/62&oldid=698998" இலிருந்து மீள்விக்கப்பட்டது