பக்கம்:பாடகி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடுத்துவிட்டு அலைகிறாய்! வேட்டியும், சட்டையும் போட்டுக் கொண்டு வெளியே வர வெட்கப்படும் காலம். புழுக்களே வைத்து வெள்ளி மீன்களைப் பிடிக்கும் தூண்டிற்காரனைப்போல அவன் உன்னை மயக்கி விட்டான். நீண்ட நாட்களாக என் துப்பாக்கி உறங்கிக் கொண்டிருக்கிறது அதற்கு வேலை கொடுக் கும்படி நீ என்னத் துரண்டாதே. ஒரு கர்னலின் மகள், ஒரு கர்னலின் மகனுக்குத்தான் மனைவியாக வேண்டும். இது என்னு டைய அசைக்க முடியாத தீர்மானம். இதை நிறைவேற்றியே தீருவேன். இதில் என் குறி தவறினல் என் துப்பாக்கி உன்னே விட்டுவைக்காது’ என்று பேசிவிட்டு ஜீப்பை எடுத்துக்கொண்டு வெளியில் போய்விட்டார்.

நான் அவரிடத்தில் பிரியமுடன் பேசி அறியாதவள். என்னுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே அவரை என் கார்டி யனாக மதித்தேனே தவிர, தந்தையாக மதிக்கமுடியவில்லை. சில இயந்திரங்கள் உற்பத்தி ஸ்தானத்திலேயே கோளாராக அமைந்து விடுவதுபோல், என் தந்தையின் மனமும் தொடக் கத்திலேயிருந்தே இரும்பாக அமைந்து விட்டது. என்னல் ஆனமட்டும் அவர் மீது மதிப்பும் பாசமும் வைத்துக.ட எனக் குப் பயன் தரவில்லை. ஒரு நாணயம் செல்லுபடியாகக் கூடிய தாக இருக்க வேண்டுமானல் அது இரண்டு பக்கமும் தேயாமல் இருக்க வேண்டுமென்ற தத்துவத்தைப் பாசத்திற்குக் கூட ஒப்பிடலாம். நான் மட்டும் அவரை என் தந்தை என்று கருதி என்ன பயன் அடைந்துவிட்டேன். விரக்தியடைந்த உள்ளம், பசியெடுத்த வயிறு மாதிரி எங்காவது தனக்கு அன்பு கிடைக் காதா என்று அலைகிறது. நான் மட்டும் அதில் எப்படி தப்ப முடியும்? - -

வெளியில் தெரிகிறவரை தான், காதல் ரகசியமாக இருக் கும். ரகசியம் உடைந்துவிட்டாலோ அது துர்நாற்றம் மாதிரி எங்கும் வேகமாகப் பரவிவிடும். முறை யாக நடந்த கல் யாணத்தைப்பற்றி உறவினர் மட்டும்தான் விமர்சனம் செய் வார்கள். ஆனல் காதலைப்பற்றியோ ஊரெங்கும் பேச்சுக் கச்சேரி நடந்தே தீரும். காதலர்கள் அதைச் சந்தித்தே ஆக

62.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/63&oldid=698999" இலிருந்து மீள்விக்கப்பட்டது