பக்கம்:பாடகி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டும். காதல் என்பது ஒரு யுத்தம். அதில் ஈடுபடுபவர்கள் வெற்றி தோல்விக்காக ஆருடம் பார்த்து இறங்குவதில்லை. காதலைப்பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக்கூறலாம். அது அவரவர்களுடைய அனுபவத்தைப் பொறுத்தது. சிலர் அதைக் காகிதவெடி என்கிறார்கள். வேறுசிலர் அதைப் பணித் துளி என்கிரு.ர்கள். இன்னும் சிலர் காற்றில் ஆடும் விளக்கு என்கிறார்கள். இந்த உதாரணங்களெல்லாம் காதலின் முடி வுக்குப் பிறகு தோன்றியவை. இப்படிப்பட்ட அபாய அறிவிப்பு களுக்குப் பிறகும் கூட காதல் என்ற ஒரு தத்துவம். இலக்கியத் திலும், வாழ்க்கையிலும் இன்னும் அழியாமலிருக்கிறதென்றால் உண்மையான காதல் வாழ்க்கை என்ற புண்ணிய வாழ்க்கை உலகத்தில் எங்கோ இருக்கிறதென்றுதானே பொருள் என்னைப் பொருத்த வரையில் நான் அந்த வாழ்க்கையைத் தேடித்தான் போய்க் கொண்டிருக்கிறேன், வெற்றி தோல்வி பற்றி நான் அக்கறைப் படவில்லை. என்னைப் போலவே அவரும் நினைக்க வேண்டுமென்று தான் பிரார்த்திக்கிறேன்.

இன்றுவரை எங்களுக்குள் கருத்துவேறுபாடுகள் எழவில்லை. எங்களுடைய நிறங்களை விட, எங்களுடைய உயரங்களை விட, எங்களுடைய கொள்கையும், மனமும் மிகவும் பொருத்தமாக அமைந்தவை இந்தப் பொருத்தத்தை மாற்றுவதற்கு பெரிதும் பாடுபட்டுக் கொண்டிருப்பவர் மயில்வாகனன். அவரது குறுக் கீட்டையும், நையாண்டியையும் நான் பொருட்படுத்தவில்லை. காதலின் சுவைக்கு ஒரு வில்லன் தேவையல்லவா?

மயில்வாகனன் சிறந்த விளையாட்டு வீரர். தங்கப்பதக்கங் களைப் பெற்று எங்கள் கல்லூரிக்குப் பெயர் எடுத்துக் கொடுப் பவர். கவர்ச்சியான தோற்றமுடையவர். வெளிப்படையாகச் சொன்னல் கருணையானந்தத்தை விட அழகானவர். காதல் மட்டும் அழகிலே பிறப்பதென்றால், நான் அவரைத்தான் க்ாத லித்திருப்பேன். மயில்வாகனரின் பார்வையும், சிலேடையான பேச்சும் அவர் என்னை விரும்புகிறார் என்பதை எனக்கு நன்றாகச் சுட்டிக்காட்டின. ஒரு நாள் அவர் என்னே நெருங்கிவந்தார்.

63

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/64&oldid=699000" இலிருந்து மீள்விக்கப்பட்டது