பக்கம்:பாடகி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

‘நாச்சியார் என்று கூப்பிடும் குரல் கேட்டது திரும்பிப் பார் த் தே ன். மயில்வாகனன் தான் என் பின்னல் வந்து கொண்டிருந்தார். -

‘என்ன வேண்டும்? என்று கேட்டேன்; மற்றவை என்னி டம் நிறைய இருக்கின்றன என்றார்.

அவரது பதில் எனக்கு அருவருப்பைக் கொடுத்தது. நாடக வசனம் போல் செயற்கையாகப் பேசினர் அவர். -

‘இது முறையா உங்களுக்கு மாட்டுச் சந்தைக்குப் போய் உழவுக்கு மாடு வாங்குவது மாதிரி ஒரு பெண்ணின் உறவை வாங்கிவிட முயற்சிக்கலாமா?’ என்றேன். -

‘பெண்களின் தரத்தை நீதான் குறைத்துக் கொள்கிறாய். பெண்களை மாடுகளுக்கு ஒப்பாகக் கூறலாமா? அவர்கள் தாய்க் குலமல்லவா! இன்னும் சொல்லப் போனல் அவர்கள் தெய்வங் களாயிற்றே! இந்தப் பதிலிலிருந்து முதல் நாள் இரவு மயில் வாகனன் ஏதோ ஒரு சினிமா பார்த்திருக்கிறார் என்று நன்றாகப் புரிந்தது.

‘நான் உங்களைப் பெரிதும் மதிக்கிறவள். உங்களால் ஏதோ ஒரு வகையில் இந்தக் கல்லூரிக்குப் பெருமை சேருகிறது. அந்த மதிப்பை நீங்கள் காத்துக் கொள்வதே நல்லது’ என்று உரை யாடலுக்கு முடிவு கூறினேன். r

‘கால் பந்தாட்டத்தில் பெனல்ட்டிஷாட் எளிதில் கிடைக் காது. எப்போதாவதுதான் கிடைக்கும். அதில் கோல் அடிக்க முடியாவிட்டால் வெற்றி மதில்மேல் பூனைதான். நீ இன்று

64

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/65&oldid=699001" இலிருந்து மீள்விக்கப்பட்டது