பக்கம்:பாடகி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனியாகக் கிடைத்திருப்பது எனக்கு பெ ன ல் ட் டி ஷா ட் கிடைத்தது மாதிரி'மயில்வாகனன் விளையாட்டு வீரராகையால் அந்தப் பாணியிலேயே பேசினர். -

நான் பதில் பேசவில்லை. நான் பதில் சொன்னல் அவரும் எதையாவது சொல்வார். பேச்சு வார்த்தைகளுக்கு முடிவு ஏற்படாது. எட்டியிருந்து பார்ப்பவர்களுக்கு நாங்கள் இருவரும் உற்சாகமாகப் பேசிக் கொண்டு போவது போலவும் தோன்றும் என்பதால், நான் பேசாமல் நடந்து கொண்டே போனேன்.

‘வருகிற சனிக்கிழமை தாவர இயல் மாணவர்களுக்கு ‘பிக்னிக் இருக்கிறது. அதற்கு நீயும் வந்துதானே ஆகவேண்டும்! பென்ல்ட்டிஷாட் கிடைக்காவிட்டாலும், கார் னர் ஷாட் டாவது கிடைக்காமலா போய்விடும் குட்பை, நாச்சியார்!’ என்று கத்திக் கொண்டே அவர் வகுப்பறைக்குள் போய் விட்டார். நான் அவரைக் கோபமாகப் பேசியது எத்தனை பேருக்குத் தெரியப்போகிறது. நாச்சியாருக்கும் மயில்வாகன னுக்கும் ஏதோ ஒரு ஊடல் இருக்கிறதென்று யாராவது கதை பின்னி விடாமலா இருக்கப் போகிரு.ர்கள் என்ற அதிர்ச்சி எனக்கு ஏற்படத்தான் செய்தது. r - -

எனக்கு நிம்மதியில்லை; மயில்வாகனன் வகுப்பறையில் என்னையே கடைக்கண்ணுல் பார்த்துக் கொண்டேயிருந்தார். இவருக்கு திடீரென்று இந்தப் பைத்தியம் எப்படிப் பிடித்தது ஒருவேளை நான் தனியாக வந்த சந்தர்ப்பத்தை அவர் பயன் படுத்தத் தொடங்கியிருப்பாரோ என்று கூட எ ண் ண த் தோன்றியது. எந்த நாளும் இல்லாத முறையில் அன்று அவர் அவ்வாறு நடந்து கொள்ளக் காரணமில்லாமலா இருக்கும்! திறமைசாலிகள் வெற்றி வாய்ப்பை இழந்து விடுவதற்கும், அறவே தகுதியற்றவர்கள் போட்டியின்றித தேர்ந்தெடுப்பதற் கும் சந்தர்ப்பங்களை இழப்பதும், பயன்படுத்திக் கொள்ளுவதும் தான் அடிப்படைக் காரணங்கள். இவ்வளவு காலமாக இல்லா மல், நான் தனிமையாக வந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு மயில்வாகனன் என்னைச் சீண்டிப் பார்த்தது அவருக்கு

65

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/66&oldid=699002" இலிருந்து மீள்விக்கப்பட்டது