பக்கம்:பாடகி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு வகையில் வெற்றிதானே! இதை எப்படி நர்ன் கருணையா னந்தத்திடம் சொல்லுவது! சொன்னல் அவர்கள் இருவருக்குள் பெரும் பகை மூண்டு விடும்; சொல்லா விட்டால் இதை ஏன் நீ அப்போதே என்னிடம் சொல்லவில்லை என்று பின் எப்போதா வது கருணையானந்தம் கேட்பார். ஒவ்வொரு பெண்ணுடைய வாழ்க்கையிலும் இப்படி ஒரு அத்தியாயம் வராமல் இருக்காது. அந்தக் கட்டத்தில் அவள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கத்தான் செய்வாள். பெண்கள் மற்றவர்களுக்கு மட்டும் புதிராக விளங்குவதில்லை; ஒரு பெண் சில சமயங்களில் தனக்கே புதிராகி விடுவதுமுண்டு! அதுவும் மையலில் ஈடுபட்ட பெண் களைச் சொல்லவே வேண்டாம். தினசரி தெம்மாளிகளாகவும், வினய மற்ற பூச்சிகளாகவும் மாறி மாறித்தான் காலத்தைத் தள்ளுவார்கள். பெண்கள் எப்படிப் பழகினலும், அவர்களைப் பற்றி ஏதாவது விமர்சனங்கள் எழுந்துதான் அடங்கும். சத்தம் போட்டு பேசினால், அவள் நாணமில்லாதவள்; பாலில்லாத பசுவிற்குச் சமமானவள் - என்று நையாண்டி செய்வார்கள். ஊமையாகவும் அடக்கமாகவும் இருந்தால் அவளேப் போன்ற சகுனியையோ கூ னி ைய ேயா பார்க்க முடியாது என்று இடித்துப் பேசுவார்கள். வாய்ப் பெட்டிகளின் பேச்சுக்கச்சேரி களுக்கு கருப்பொருளாகச் சிக்காமல் தப்பித்துக்கொண்டு வந்த நான் கூட கடைசி ஆண்டில் சிக்கிக் கொண்டேன். வெறும் வாயை மெல்லுகிறவர்கள், அவல் கிடைத்தாலே விடமாட் டார்கள்; நானே கிடைத்து விட்டேனே! நாச்சியார், யாருக்கு? அறிவாளிக்கா? ஆட்டக்காரனுக்கா? என்ற வெடிக்கட்டுகள் கல்லூரி வராந்தாக்களில் வெடித்துத்தெறித்தன.

மகாபலிபுரத்திற்குப் பிக்னிக் போகும் நாள் வந்தது. கருணையானந்தம் இலக்கியம் படிக்கும் மாணவர். அவர் எங்களு டன் பிக்னிக் வர முடியாது. தாவர இயல் படிப்பவர்களுக்கு மட்டுமே பிக்னிக் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாங்கள் காலையிலேயே மகாபலிபுரம் புறப்பட்டு விட் டோம். நாங்கள் மொத்தம் பதினைந்து மாணவர்கள் தான்.

அவர்களில் என்னைச் சேர்த்து மூவரே பெண்கள். பெண்கள்

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/67&oldid=699003" இலிருந்து மீள்விக்கப்பட்டது