பக்கம்:பாடகி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லோருமே பெரிய இ ட த் ைத ச் சேர்ந்தவர்கள். ஒருத்தி பிரின்ஸ்பால் மகள். இன்ன்ொருத்தி ஜட்ஜ் மகள். நானே கர்னல் மகள் மூவரில் எனக்கு மட்டும் தான் பெற்றாேர்களின் பாது காப்பு இல்லை. இது எனக்கு ஒரு மனக்குறையாகப்பட்டது. சில நேரங்களில் பெற்றாேர் இல்லாத பெண்களை அங்கஹlனர்களாக கூட இந்த சமுதாயம் கருதி, அவர்களை உதாசீனப்படுத்தியிருக் கிறது. அப்படி ஒரு சூழ்நிலை எனக்கு வந்து விடக்கூடாது என்ப தற்காகவே, எனக்கு ஏற்றவர் என்று கருதி, கருணையானந்தத்

தோடு வாழ நான் தீர்மானித்துக் கொண்டேன், ஆனால்? -

4

நிசிங்கள் மகாபலிபுரம் போய்ச் சேர்ந்து விட்டோம். வழக்கமாக பார்க்கும் கல் யானை, கலைச்சிற்பங்களைப் பார்த்து விட்டு திரும்பும்போது எங்களைத் திடுக்கிடச் செய்யும் தகவல் ஒன்று எங்களுக்குக் கிடைத்தது. மயில் வாகனன் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தபோது, யாரோ அவனைச் சுட்டு வீழ்த்தி விட்டதாகவும், ஆனால் அவர் உயிர் த ப் பி விட்டதாகவும் நாங்கள் கேள்விப்பட்டோம். எ ங் க ள் பேராசிரியர் அதிர்ச்சி அடைந்தார். எனக்கும் மனதுக்கு வேதனையாகத் தானிருந்தது. அவர் மீது எனக்குக் கா த ல் இல்லாவிட்டாலும், ச ரா ச ரி மனிதாபிமானமாவது இல்லாமல் போகுமா?

அதற்குமேல் அங் கு சுற்றிக் கொண்டிருப்பது நல்லதல்ல என்று நாங்கள் உடனே சென்னைக்குத் திரும்பி விட்டோம்.

நான் வீட்டுக்குள் நுழையும்போது, என் த ந் ைத பரப் பரப்பாகக் காணப்பட்டார். அவர் அரண்டிருப்பது போல் எனக்குத் தெரிந்தது. எதற்கும் கலங்காமலும், கடுகடுப்பாகவும் பேசும் அவர், என்னைப் பார்த்ததும் கண்கலங்கி விட்டார்!

67

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/68&oldid=699005" இலிருந்து மீள்விக்கப்பட்டது