பக்கம்:பாடகி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லாபமும் உண்டு. நஷ்டமும் உண்டு, அந்த லாப நஷ்டம் பெண் களின் குணங்களைப் பொருத்துத்தான் அமைகிறது. என்னைப் பற்றி உங்களுக்கு முழுதும் தெரியாவிட்டாலும் ஒரளவாவது தெரியும். அதனால் என்னைக் குறித்து உங்கள் மனத்தில் ஒரு அளவுகோல் உருவாகியிருக்கும். ஆனல் எனக்கு உங்களைப்பற்றி இன்னும் தெரியாததால் அப்படிப்பட்ட நினைப்பே தோன்ற வில்லை. அதனால் மதிப்புக் குன்றாது”.

டாக்டர் கோகிலா சிரித்துக் கொண்டே வீட்டைச் சுற்றிக் காண்பித்தாள்.

“இவ்வளவு பெரிய வீட்டில் தன்னந்தனியாக வாழ்கிறீர் களே, பயமாக இல்லையா? நாச்சியார் கேட்டாள்.

‘பயமில்லாமலா இருக்கும்; என்ன செய்வது கூர்க்காவை நம்பித்தான் இருக்கிறேன்’ என்றாள் கோகிலா.

எத்தனை நாளைக்கு வாசலில் நிற்கும் கூர்க்காவையே நம்பிக் கொண்டிருக்கப் போகிறீர்கள். மனத்துணைக்கு என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்கிறேன் டாக்டர்’. நாச்சியார் உரிமையோடு பேசினுள்.

‘உன் கேள்வி எனக்கும் புரிகிறது. என் பெற்றாேர்களுக்கும் என் விஷயம் பெரிய மன உளைச்சலாகத்தானிருக்கிறது. எனக்கு ஒரு அண்ணன் இருந்தார். அவர்மீது என் அம்மாவும்! அப்பாவும் உயிரையே வைத்திருந்தார்கள். நன்றாகப் படிக்க வைத்தார்கள். ஆனல் அவர் எங்களையெல்லாம் துயரத்தில் ஆழ்த்திவிட்டார்”.

‘என்ன நடந்தது டாக்டர்!’

‘உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லை. ஆனல் அவர் பாதிரியாகி விட்டார்” என்றாள்.

“துறவின் மீது உங்கள் அண்ணனுக்கு அவ்வளவு பற்று ஏன்?’’ - : -

$95

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/96&oldid=699036" இலிருந்து மீள்விக்கப்பட்டது