பக்கம்:பாடகி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தத் தத்துவத்தில் அவர் சிக்கிக்கொண்டார் போலிருக்கிறது. ஏன் டாக்டர், நாம் மல்லிகை சூடுகிருேம். நாம் வணங்கும் தெய்வத்திற்கு அரளிப்பூ மாலைதானே சூடுகிரு.ர்கள். அரளிப் பூவில் என்ன மணம் இருக்கிறது! தெய்வங்களே அரளிப்பூக்களே விரும்புவது மாதிரி, அவருக்கு அவள் பிடித்தமானவளாகி விட்டாள். அதற்கு நான் என்ன செய்வது டாக்டர்.’’ என்றாள் நாச்சியார்.

“நீ சொல்லுவதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது. கசந்து கண்களைப் பிடுங்கும் பாகற்காயைச் சிலர் முறுக்குத் தின்பதுபோல் தின்கிரு.ர்கள். அவர்களுக்கு அல்வா, ஜிலேபி ஒத்துக் கொள்வதில்லை. உடலுக்கே சில குணங்கள் இருக்கும் போது, உடலை இயக்கும் மனத்திற்கும் சில குணங்கள் இல்லா மலா போய்விடும்!’ டாக்டர் விரித்துரைத்தாள்.

இருவரும் கடை வீதியிலிருந்து வீட்டுக்குத் திரும்பினர்கள், கண்டோன் மெண்ட் போகிற வழியில்தான் டாக்டர் கோகி லாவின் வீடு இருந்தது. கோகிலா முதன் முறையாக அன்று தான் நாச்சியாரை வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். வீடு பெரிய வீடு. பங்களாத் தோற்றமுடையது.

“ஏன் நாச்சியார், உன்னைப்பற்றியே பேசிக் கொண்டிருக்கி றேனே, கொஞ்சமாவது நீ என்னைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்ப வில்லையே?? -

‘விருப்பமில்லாமலா இருக்கும் ஒரு பெண் ணு க் கு. இன்னொரு பெண்ணைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டு மென்ற ஆசையை விட நகைகள் மீது கூட அவளுக்கு ஆசை அதிகம் இராது. உங்கள் கழுத்தைப் பார்த்தேன். மாங்கல் யத்தைக் காணவில்லை. அதல்ை உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. என்று தெரிந்து கொண்டேன். அதல்ை அடுத்த கட்ட விசாரணைக்கு நான் போகவில்லை. மேலும் ஒரு @L, அவள் சிநேகிதியைப் பற்றி முழுதும் தெரிந்து கொள்வதில்

94

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/95&oldid=699035" இலிருந்து மீள்விக்கப்பட்டது