பக்கம்:பாடகி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெர்க்கண்ட்டயில் வீதியில் ஆணும் பெண்ணும் இணைந்தே திரிந்தார்கள். அப்படிப்பட்ட தோரணைகளே நாச்சியார் விரும் பாதவளாக இருந்தாலும் புரு ஷ ன் மனைவியாகப் போகும் வாய்ப்பை இழந்து விட்டோமே என்ற ஏக்கம் அவள் உள்ளத் தில் பூக்காமல் இல்லை அவள் அடிக்கடி பெருமூச்சு விட்டுக் கொண்டாள். இந்தக் காட்சியை ஒரக் கண்ணுல் பார்த்துக் கொண்ட டாக்டர் கோகிலா நாச்சியாரோடு பேச்சுக் கொடுத் தாள். * ‘ஏன் நாச்சியார் திடீரென்று இந்த முடிவுக்கு வந்தாய்?

‘தக்க நேரத்தில் தான் நான் முடிவு செய்தேன் டாக்டர் என் புருஷனைப் பற்றி எனக்குத் தெரியாதா?”

‘உனக்குத் தெரியலாம். எனக்குத் தெரியவேண்டாமா? நான் தான் உனக்கு வினையாக வந்து விட்டேனே என்று என் மனம் உறுத்துகிறதே’.

“ஐயோ, நீங்கள் என்ன செய்வீர்கள். நீங்கள் இல்லாவிட் டால் நான் புத்துயிர் பெற்றிருக்க மாட்டேனே!”

“அதைச் சொல்லவில்லை நாச்சியார்; நான் தானே சாரா தேவியை உங்களுக்கு சிகிச்சைக்காக அமர்த்தி விட்டேன். அதைத் தான் சொல்லுகிறேன” என்றாள் டாக்டர்.

இைல்லை டாக்டர், நாகை இந்த முடிவுக்கு வந்து பெருந் தன்மையோடு அறிவிக்காமலிருந்தாலும், அவர்களே இந்த முடிவுக்குத் தான் வந்திருப்பார்கள். அதனல் மருத்துவச் சிகிச் கைகள் பாதியிலேயே நின்று போயிருந்தாலும் போயிருக்க லாம்’ என்றாள் நாச்சியார். -

‘மகாலெட்சுமி மாதிரி இருக்கிற உன்னைவிட சாரா எந்த வகையில் உயர்ந்து விட்டாளாம்?”

‘நான் இதற்கு எப்படி டா க் டர் பதில் சொல்லுவது அழகின் ருசி, பார்ப்பவர்களைப் பொறுத்தது என்கிறார்களே,

$)3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/94&oldid=699034" இலிருந்து மீள்விக்கப்பட்டது