பக்கம்:பாடகி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"இருக்கிறேன், நீங்கள் கட்டிய மாங்கல்யமும் என் கழுத் தில் தான் இருக்கிறது. நான் உங்களை விட்டுப் பிரியவே மாட் டேன் அத்தான். நீங்கள் சிரிந்தால் நான் சிரிப்பேன். நீங்கள் கலங்கினல் என் மனம் தாங்காது. இதுதான் என் கொள்கை’ என்று கூறினுள்.

சாராவும் மயில்வாகனனும் சிலைபோல் நின்றார்கள். ஒரு கணத்தில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்து முடிந்து விடும் என்று அவர்கள் எதிர்பார்க்க வில்லை. சம்பவம் ஒரு மின்னலைப்போல் வெட்டி முடிந்துவிட்டது.

இப்போது டாக்டர் கோகிலா மாடிப்படியில் ஏறிவரும் அறிகுறி தென்பட்டது. -

‘நானே சொல்லுகிறேன்; நீங்கள் ஒன்றும் கலவரமடைய வேண்டாம்.”என்று நாச்சியாரே முந்திக் கொண்டாள். டாக்டர் வந்ததும் நாச்சியார் சுருக்கமாகச் சொல்லி முடித்து விட்டாள். ஆனல் டாக்டர் கோகிலாவிற்கு கண்மூடிக் கண் திறப்பதற்குள் ஒரு திடுக்கிடும் நாவலைப்படித்தது போல் தோன்றியது.

1

சன்னதி

அன்று கோகிலா நாச்சியாரைக் கடைத் தெருவிற்கு அழைத்துப் போயிருந்தாள். வீட்டுக்கு வெளி யே நாச்சியார் புறப்படுவது அது தான் முதல் தடவை. பெங்களுரில் எந்தப் பொருளும் வாங்க க் கூடிய மெர்க்கெண்ட்டயில் விதிக்கு இருவரும் போனர்கள்.

கோகிலாவின் உள்ளத்தில் ஒரு வெற்றி மிதப்பு இருந்தது. பெரிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்குரிய சுய நினைவைக் கொடுத்து விட்ட வெற்றி மிதப்புத்தான் அது.

92

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/93&oldid=699033" இலிருந்து மீள்விக்கப்பட்டது