பக்கம்:பாடகி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'அய்யோ இல்லை சாரா, நாச்சியார் சொல்லும் யோசனை அதுவல்ல.

“நீ கேள்விப் பட்டால் உலகில் இப்படி எந்த மனைவியும் சொல்ல மாட்டாளே என்று தோன்றும்.”

“அவள் சொல்லக் கூச்சப்படுவாள். நீங்களே சொல்லுங்கள் நாச்சியாரின் ஆசை என்ன?’ என்று துருவிள்ை சாரா.

‘நான் கூச்சப்பட வில்லையே, டீச்சர். என் வாயாலேயே நான் சொல்லி விடுகிறேன். அவர், என் கண் முன்னலேயே இரண்டாம் கல்யாணம் செய்து கொள்ளட்டும் என்கிறேன்’’.

“நாச்சியார்!” சாரா கூவிள்ை.

‘நாச்சியார்தான் பேசுகிறேன். தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்ட பிறகு, சாண்போனல் என்ன முழம் போனல் என்ன? நான் என் வாழ்க்கையின் தோல்வியை என் புருஷனி டமே ஒப்புக் கொள்வது ஒரு நாளும் தவருகாது. அலெக்சாண் டரிடம் தோற்ற போரஸ் மன்னன் தன்னை மன்னனுகவே நடத்த வேண்டுமென்று கேட்டது எவ்வளவு வீரமோ, அந்த அளவு தெய்வாம்சம் - புருஷனுக்கு அவள் மனைவியே இரண்டாவது மணம் செய்து கொள்ளச் சொல்வது. சாரா, மனம் திறந்து பேசுகிறேன். எனக்கு எல்லாம் தெரியும். உங்கள் இசையும், டாக்டர் கோகிலாவின் சிகிச்சையும்தான் எனக்கு மறுபடியும் சுயநினைவைக் கொண்டு வந்தன. நீங்கள் அதில் தோல் வி அடைந்திருந்தால் எனக்கு இந்தக் கட்டமே வந்திருக்காது நான் பிழைக்கவேமாட்டேன் அல்லது சுயநினைவு பெறவேமாட்டேன் என்ற எண்ணத்தில் நீங்கள் இருவரும் வெகுதூரம் போய் விட் டீர்கள். நீங்கள் எனக்களித்த உதவிக்காகவாவது நான் இந்தத் தியாகத்தைச் செய்யக்கூடாதா?’ என்று கூறியபடி மெதுவாகப் படுக்கையை விட்டெழுந்து வந்து இருவரின் கரங்களையும் ஒன்று சேர்த்து வைத்தாள் நாச்சியார். -

‘நாச்சியார்!’ என்று கூவினன் மயில்வாகனன்.

9 |

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/92&oldid=699032" இலிருந்து மீள்விக்கப்பட்டது