பக்கம்:பாடகி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ஆனந்தக் கண்ணிர், டீச்சர்! கண்ணிர் என்பது துன்பத்தின் அறிகுறி மட்டும் அல்ல: பலமாகச் சிரித்தாலும் கண்ணிர் வருவ துண்டு.”

நாச்சியாரின் பேச்சு சாராவை திகிலடைய வைத்தது.

“நாச்சியார் பூரண குணமடைந்துவிட்டாள்; இல்லையா மயில்வாகனன் என்று உணர்ச்சி பொங்கக் கேட்டாள், சாரா.

  • நான் அப்படி நினைக்கவில்லை. சாரா ம ன க் கு ழ ப் ப ம் அடைந்திருக்கிருள்.”

‘இல்லை, மிஸ்டர் மயில்வாகனன், நாச்சியார் நிதான, மாகத்தான் பேசுகிருள். அவளிடம் துளியும் மனக்குழப்பம் இருப்பதாகத் தெரியவில்லையே! மனக்குழப்பம் உள்ளவர்களுக்கு இவ்வளவு களேயாக முகம் இருக்காது என்று டாக்டர்கள் அடிக்கடி சொல்லுவார்கள். பரபரக்கப் பேசினுள் சாரா.

‘இல்லை சாரா, நீ, முன்னேயும் பின்னேயும் தெரியாமல் பேசுகிறாய் -மயில்வாகனன் குறுக்கே பேசினன்.

‘டீச்சர் சொல்லுவதுதான் சரியானது. ஒரு பெண்ணை மற்றாெரு பெண்தான் புரிந்துகொள்ள முடியும். எனக்கு எந்த மனக்குழப்பமும் இல்லை டீச்சர். நான் இனிமேல் இல்லற வாழ்க் கைக்கு உகந்தவளாக இருக்க முடியாது; என் கணவரோ பெரிய இடத்துப்பிள்ளை. பல விழாக்களுக்குப் போக வேண்டியவர். அவர் அப்படிப்பட்ட இடங்களுக்கு எல்லாம் மனைவி இல்லாமல் போவது எனக்கு அவமானமாகப்படும் என்பதற்காக நான் ஒரு

யோ ச னை சொன்னேன், டீச்சர்’ என்று ஆரம்பித்தாள்

நாச்சியார்.

“நாச்சியார் சொல்வது சரியாக இருந்தால், நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே! உங்கள் தி ரு ப் தி யே நாச்சி யாருக்குச் சிறந்த மருந்தாக அமையலாம் அல்லவா’ சாரா திரும்பப் பேசிள்ை, -

90

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/91&oldid=699031" இலிருந்து மீள்விக்கப்பட்டது