பக்கம்:பாடகி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

“ff இதை மனச் சுத்தத்தோடு சொல்லவில்லை. உன் மனத்தில் ஏதோ கல்மிசம் ஏற்பட்டு விட்டது. என்னைப் புண் படுத்தவே நீ இப்படிப் பேசுகிறாய்’ என்னதான்.மயில்வாகனன். பதில் பேசினலும், அவன் முகத்தில் ஒளிந்து கொண்டிருந்த கள்ளத்தனத்தை அவனால் மறைக்க முடியவில்லை.

“நான் மனத்தில் துளியும் வேற்றுமையை வளர்த்துக் கொள்ளவில்லை. என்னல் மனைவியாக இருக்க முடியாது என்ற கட்டத்திற்கு வந்த பிறகு தானே, நான் இந்தப் பேச்சுக்கு வந்திருக்கிறேன். பெரிய குடும்பங்களில் பிரச்சினைகள் தோன்றி ல்ை, அதைப் பெரிது படுத்த பல பேர் வாசலில் காத்திருப் பார்கள். அதல்ைதான் கெளரவமாக நாமே இந்த ஏற்பாட்டை செய்துகொள்வோம் என்கிறேன். இந்த ஏற்பாட்டினல் எனக்கு உங்கள் மீதுள்ள மரியாதை குறையும் என்று கருதாதீர்கள். செடியின் அனுமதியின்றி பறிக்கும் மலர்கள் கூட தன்மனத்தைப் பரப்பத் தவறுவதில்லையே! தமிழ்ப் பெண்களும் அந்தப் பூக்கள் மாதிரித்தான்’ என்றாள் நாச்சியார்.

மறுநாள் காலை வீட்டு வாசலில் கார் ஹாரன் சத்தம் கேட்டது.

‘நல்ல நேரத்தில் சாராவும் வந்துவிட்டாள். இன்றைக்கே பிரச்சினையை முடித்துவிடலாம்” என்று மெதுவாகச் சொன்னுள் நாச்சியார்.

அதற்குள் தேவதை போல் அலங்காரம் செய்து கொண் டிருந்த சாரா மேலே மாடிக்கு வந்துவிட்டாள்.

“என்னம்மா நாச்சியார், கண் கலங்கியிருக்கிறாய்? சாரா கேட்டாள்.

89

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/90&oldid=699030" இலிருந்து மீள்விக்கப்பட்டது