பக்கம்:பாடகி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தியாகம் செய்யத் துணிந்து விட்டேன். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நீங்கள் என்றும் போல் வெளியூர்கள் போய் வரவேண்டும் என்பதே என் விருப்பம்’ என்று நாச்சியா; குழறியபடி பேசிக்கொண்டே போளுள்.

மயில்வாகனன் இடைமறித்துப் பேசினன்.

கநாச்சியார், நீ சொல்ல வந்தது என்ன என்பதை மட்டும் சொல்லு. அதிகம் பேசி, குணமாகி வரும் உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதே!” என்றா:ன்.

“சுருக்கமாகச் சொல்லத்தான் பேசுகிறேன். எ த ற் கும் காரணம் வேண்டுமல்லவா. அந்தக் காரணத்தைத்தான் இது வரை சொன்னேன். என் பொருட்டு, என் மனச்சாந்திக்காக நீங்கள் இன்னொரு திருமணம் செய்து கொள்ள உங்கஆா பிரார்த்திக்கிறேன். அது என் வாழ்நாளிலேயே என் கன் முன்னடியே ந ட ந் து விட வேண்டுமென்று கெஞ்சுகிறேன்’ என்று கரைபுரளும் காவேரி போல் கண்ணிரை வடி த்துக் கொண்டே சொன்னுள்.

நாச்சியார்:

“எல்லாம் உணர்ந்துதான் சொல்கிறேன், அத்தான் .. இனி நான் உங்களுக்கு அருகதையுள்ள ம ன வி யாக இருக்கவே முடியாது.”

“நாச்சியார் உனக்குப் ைபத் தி ய ம் பிடித்துவிட்டதா? யாராவது வரப்போகிறார்கள்.”

“நானும் அதற்காகத்தான் கதையை முடித்துவிடப் பார்க் 3, விரைவில் நீங்கள் என் ஆசையை நிறைவேற்றி வைக்க gag:G. உலகில் எந்த மனைவியும் இப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்திருக்கவே முடியாது.: -

88

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/89&oldid=699028" இலிருந்து மீள்விக்கப்பட்டது