பக்கம்:பாடகி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இதோ வந்திட்டேன்’ என்று அலறிக் கொண்டே அவள் அருகில் ஒடினன் மயில்வாகனன். Y.

“எனக்கு இப்போது கொஞ்சம் நினைவு திரும்பியிருக்கிறது. பேசக் கூட நாக்கு இணங்குகிறது” என்று கண்ணிர் சிந்தக் கூறிக் கொண்டே அவனுடைய நுடம்பாய்ந்த க் ரத் ைத ப் பிடித்துப் பார்த்தாள். அதில் இரண்டு சொட்டுக் கண்ணிர் விழுந்தது.

“அத்தான்!’

“சும்மா, சொல்லு நாச்சியார். உனக்காக எதுவும் செய்யத் தயாராகி விட்டேன்! புது வீடு, புதிய கார் எல்லாம் வாங்கி விட்டேன்.” என்றான் மயில்வாகனன். .

‘அதுமட்டும் தான?’ என்று ஒரு கேள்வியைப்போட்டாள் நாச்சியார். பெண்கள் ஜாடை பேசுவதில் ராஜதந்திரிகளை விட அரசியல் வாதிகளை விடச் சிறந்தவர்களல்லவா!

மயில்வாகனன் திகைத்துப் போனன். நாச்சியார் இப்படிக் கேட்டது வினயமில்லாமல் கேட்டது தான அல்லது எல்லாம் அவளுக்குத் தெரிந்து விட்டதா? என்ற மனக்குழப்பம் அவனைக் குன்ற வைத்தது. -

அத்தான்! நான் பிழைத்தாலும் உங்களுக்கு மனைவியாக இருக்க அருகதையில்லாமல் போய் விட்டேன். என்னே விருந்து வேடிக்கைகளுக்கு உங்களால் அழைத்துப் போக முடியாதே. அதற்காகவாவது நீங்கள் ஒரு ஏற்பாடு செய்து கொள்வது நல்லது என்று நான் மனதார நம்புகிறேன். எந்தப் பெண்ணும் இப்படி ஒரு முடிவுக்கு வரமாட்டாள். -

‘நான் உங்களுக்காக எவ்வளவோ துயரங்களே அனுப வித்து விட்டேன். எதை எதையோ தியாகம் செய்துவிட்டேன். இப்போது உங்களுக்காக வெளி உலகில் உங்களுக்கு மதிப்புக் குறைந்து விடக் கூடாது என்பதற்காக என் வாழ்க்கையையே

87

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/88&oldid=699027" இலிருந்து மீள்விக்கப்பட்டது