பக்கம்:பாடகி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிறைந்த அவளுக்கு, எந்த இசை அவளை ச் சுய நினைவிற்கு இழுத்து வந்ததோ, அதே இசை அ வ ள் வாழ்க்கையை முறிக் கும் ஒப்பாரியாகவும் மாறும் என்று எதிர் பார்க்கவில்லை. சாரா மகத்தான வெற்றியை ஈட்டி விட்டாள். அ வ ள் அடைந்தது இரட்டை வெற்றி. நி னை ைவ நாச்சியாருக்குக் கொடுத்தாள்; அவள் நெஞ்சில் இருந்த மயில் வாவனனே அபகரித்துக் கொண் டாள். ஆம்! மயில்வாகனனுக்கும் சாராவிற்கும் எப்படியோ ஒரு பிணைப்பு ஏற்பட்டு விட்டது. அதைக்கனவுபோல் அறை குறையாகத் .ெ த ரி ந் து .ெ கா ன் டி ரு ந் த நாச்சியார் ஒரு நாள் கண்ணுரக் கண்டு விட்டாள். நாச்சியார் நினைவு பெறத் தொடங்கியதுமே கண்ட கா ட் சி அதுதான். மயில் வாகனன் தோளில் சாரா சாய்ந்திருந்தாள். தூக்கம் கலைவது போல் புரண்டு படுத்த நாச்சியாருக்கு இது தெரிந்துவிட்டது. முகத்தைச் சுழித்துக் கொண்டாள். ஆனல் அவர்கள் நாச்சியார் ஸ்வரணை இல்லாமல் புரளுகிருள் என்று நினைத்து விட்டார்கள் போலும் ஆனல் நாச்சியாரோ நியாயமாகச் சிந்தித்தாள். வீடு காலியாக இருந்தால் முதலில் குப்பை, கூளங்கள் நிறையும் பின்பு விஷப்பூச்சிகள் குடியேறும்; இறுதியாக நல்ல பாம்பே குடிவந்துவிடும். ஒரு வீட்டுக்கே இந்த நிலை என்றால் ஒரு செல் வந்தரின் உள்ளம் வெறிச் சோடிக் கிடந்தால் எந்தப் பெண் தான் சும்மா இருப்பாள். - இப்படி நினைத்தாள் நாச்சியார். அவள் மனம் கலங்கியிருந்தாலும் அவள் உடலில் நடுக்கம் தோன்றியிருந்தாலும் உள்ளுர அவள் மனத்தில் ஒரு வைரம் பாய்ந்திருந்தது. “அவர் யாருக்கு வேண்டுமானலும் கணவராக இருக்கட்டும்; ஆனல் நான் அ வ ரு ைட ய மனைவிதான். ஏனென்றால் தமிழ் நாட்டிலுள்ள ஒவ்வொரு பெண்ணின் pவ னும் அவர்களுடைய கணவன்மார்களிடம்தான் இருக்கிறது” என்ற மந்திரத்தை அவளது ஊமை நெஞ்சு தியானம் செய்து கொண்டே இருந்தது.

“அத்தான்!”

மயில்வாகனன் எதிர் பார்க்கவே இல்லை. வாய்க்குழப்பத் தோடு அழைத்தாள் நாச்சியார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/87&oldid=699026" இலிருந்து மீள்விக்கப்பட்டது