பக்கம்:பாடகி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"நாச்சியாரம்மா, இதெல்லாம் முறைதான? இப்போது தான் உனக்கு நி னே வு வருகிறது. அதற்குள்ளாக இவ்வளவு இடையூரு?... . சாரா, அவளுக்காக என்னை மன்னித்து விடுங் கள். இசையை விட்ட இடத்திலிருந்து வாசியுங்கள். நாச்சியார் கோபிக்க மாடடாள்’ என்றான் மயில்வாகனன்.

‘உடைந்த பொம்மையை உடனே என்னுல் ஒட்ட வைக்க முடியாது. இதே ராகத்தை நாளேக்கு வாசிக்கிறேன்’ என்று கூறிவிட்டு அவள் புறப்பட்டாள். வ ழ க் க ம் போல் மயில் வாகனன் அவளை வாசல் வரை சென்று அனுப்பி வைத்து விட்டு வந்தான். அப்போது நாளேக்கு நாங்கள் புது வீட்டுக்குப் போகிருேம் என்பதையும் நினைவு படுத்திவிட்டு வந்தான்.

g- o d G og to G

நாச்சியாருக்கு இப்போது சித்தப் பிரமை சிறிது தணிந் திருந்தது. கணகளே இமைத்தல், காது கொடுத்துக் கூர்ந்து கவனித்தல் போன்ற சாதாரண நி லே க் கு அவள் திரும்பிக் கொண்டிருப்பது தெரிந்தது. லேடி டாக்டரின் மருந்தும் மருத் துவ முறையும் தான் அவளுக்குச் சுய நினைவைத் தருவதற்குத் துணை புரிகின்றன என்பதை அவள் உணராமல் இல்லை. வெகு வாக உணர்ந்தாள். ஆ னு ல் அ வ ள் மனத்தில் நான் ஏன் மீண்டும் உயிர் பெற வேண்டும், என்ற தேம்பல் அரும்புவிடத் தொடங்கியிருந்தது. ப ைழ ய நினைவுகள் அவளே வாட்டி வதைத்தன. தனது வாழ்க்கைப் பாதை, வித்தைக்காரன் காட் டும் வேடிக்கை விளையாட்டுக்களாகப் போய்விட்டதே என்ற ஏக்கம் அவளைச் சுருள வைத்தன.

எப்போதும் இல்லாமல், நோய்க்குப் பிறகு ஏன் நாச்சி யாருக்கு இந்த மனக்கலக்கம் ஏற்பட்டது? புருஷனைத் தெய்வ மாக மதிப்பவள்; கள்ளையும் சாராயத்தையும் கலந்து குடிப்ப வைைலும் அவன் கணவனுகிவிட்டால், அவன்தான் கடவுள் என்று மதிக்கும் தமிழ் ம ர ைப மதிப்பவள், ஏன் திடீரென்று விரக்தியடைந்தாள்? வெட்கம் நிறைந்த அவளுக்கு அடக்கம்

85

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/86&oldid=699025" இலிருந்து மீள்விக்கப்பட்டது