பக்கம்:பாடகி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜாடை மூலம் இசையை நிறுத்தச் சொல்லிவிட்டாள். சாரா திகைத்துப் போனள். பாத்ருமுக்குள் இருந்த மயில்வாகனன் வெளியில் க ண் ணு டி ப் பாத்திரம் உடைந்து நொருங்கி விட்டதைப் போல நினைத்து வேகமாக ஓடி வந்தான்.

“ஏன் பாட்டை நிறுத்தினர்கள்?’ என்று ஆ வ .ே லா டு கேட்டான்.மயில்வாகனன்.

‘நான் வெற்றி பெற்றுவிட்டேன். என் இசை நாச்சியா ருக்கு நினைவை ஊட்டிவிட்டது” என்றாள் சாரா.

“புரியும்படி சொல்லுங்கள். உச்சக் கட்டத்தில் யாராவது பாட்டை நிறுத்துவார்களா? குழந்தை தாய்ப்பால் குடித்துக கொண்டிருக்கும் போது, அந்தக் குழந்தைக்கு உரிமைப் பட்ட தகப்பன் கூட குழந்தையை வெடுக்கென்று பிரிக்க மாட்டான். நீங்கள் இப்படி நிறுத்தி விட்டீர்களே’ என்றான் மயில்வாகனன்.

‘மயில்வாகனன் சார், என்னிடத்தில் எ ந் த க் குற்றமும் இல்லை. எல்லாம் உங் க ள் மனேவிதான் காரணம்: வம்புக்கு விதை தூவிள்ை சாரதா.

‘பாட்டை நிறுத்தியதற்கு அவளா கார ண ம்! அவள் எப்படிக் காரணம் ஆவாள்? ம யி ல் வா. க ன ன் திரும்பக் கேட்டான்.

ஆம்; நாச்சியார் தான் போதும் பாட்டு என்றாள்; நான் நிறுத்தி விட்டேன். என் இசையை யாரும் விரும்பா விட்டால் நான் வாசிப்பது இல்லை.”

என்ன சாரா, இது சரியான ப தி லா? டாக்டரைப் பார்த்துக் குழந்தை பயந்துவிட்டால், மருந்து கொடுக்காமலா போய்விடுகிருேம்'?

“பாட்டை நிறுத்து என்று கை யி ன ல் ஜாடை காண் பிக்கும் போது, நான் ஏன் வாசிக்க வேண்டும்?”

84

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/85&oldid=699024" இலிருந்து மீள்விக்கப்பட்டது