பக்கம்:பாடகி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிலில் பெ ரு ந் த ன் ைம இல்லாதது போல் உணர்ந்தாள் கோகிலா. - -

‘நீங்கள் என்ன சினிமாவுக்கா போகிறீர்கள்! இசை படிக் கத்தானே வந்திருக்கிறீர்கள்’ லேடி டாக்டர் விடவில்லை.

‘நான் தினசரி இப்படித்தான் வருகிறேன். டாக்டர். தலை நிறைய ம ல் லி கை வைத்துக் கொள்வேன். எப்படியாவது திருவாளர் மயில்வாகனன நாம் வெ ற் றி கொள் ள வேண்டாமா? - - -

சாராவின் இந்தப் பதில் டாக்டர் மனதில் முள்ளாகத் தைத்தது. சாரதா வினயமில்லாமல் பேசுகிருளா, அல்லது இரண்டு அர்த்தப்படப் பேசுகிருளா என்று புரிந்து கொள்ள முடியவில்லை.

லேடி டாக்டர் போனபிறகு சாரா பியான வாசித்தாள். கர்டைக இசை, கிறிஸ்துவமதப் பாடல்கள் எல்லாப் பாடல் களும் பாடினுள், மல்லாந்து படுத்திருந்த நாச்சியார் தலே யணையை அணைத்தபடி ஒருக்கணித்துப் படுத்தாள். இசை அவளே உசுப்பிவிட்டிருந்தாலும் முகத்தில் சுழிப்பை உண்டாக்கி யிருப்பதுபோல் தெரிந்தது. சா ர த ா அடுத்த பாட்டுக்குப் போனள். பியான வாத்தியத்தைக் கைவந்த கலையாக வைத் திருக்கும் சாரா, க ல் யா னி ராகத்திற்கு ஜோடனைகள் தொடுத்துக் கொண்டிருந்தாள். மாலை நேரத்தில் மல்லிகையை விரும்பாத பெண்ணும், கல்யாணி ராகத்தை விரும்பாத உள்ள மும் இருக்க முடியாது.

ஆனல் நாச்சியார்?

ஒருக்கணித்துப் படுத்திருந்தவள் மீ ண் டு ம் மல்லாந்து படுத்துக் கொண்டு முகட்டையே பார்த்துக் கொண்டிருந்தாள். சாரா இசையை நிறுத்தவில்லை. தொடர்ந்து வாசித்தாள். இசையின் நாதம் நன்றாகக் களை கட்டியிருந்தது அந்தக் கட் டத்தில் எதிர்பாராதது ஒன்று நடந்தது. நாச்சியார், கை

83

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/84&oldid=699023" இலிருந்து மீள்விக்கப்பட்டது