பக்கம்:பாடகி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புன்னகை புரிவதை அறிந்து பூரிப்படைய வேண்டாமா? இப்படி டாக்டர் கோகிலா நினைத்துக் கொண்டிருக்கும்போது, மயில்வாகனன் குறுக்கே பேசினன்.

அடுத்த மாதம் முதல் தேதி நாங்கள் புது வீட்டுக்குக் குடிபோகிருேம்” என்றான்.

‘அப்படியா, ரொம்ப நல்லது, வாடகை எவ்வளவு?

வாடகையா? விலைக்கே வாங்கி விட்டேன் கண்டோன் மெண்ட் பகுதியில்” என்றான் மயில்வாகனன்.

டாக்டர் கோகிலா இயந்திரத்தைப் போல் பதில் சொன் ஞளே தவிர அவள் இதயம் வேறு எங்கோ சுழன்று கொண்டி ருந்தது. இருந்தாலும் அதை அவள் வெளியில் காட்டிக்கொள்ள வில்லை.

மிஸ்டர் மயில்வாகனன், என்ன நம்புங்கள். உங்கள் மனைவி நிச்சயமாக பழைய நிலைக்கு வந்துவிடத்தான் போகி ருள். நீங்கள் இல்லறம் நடத்தத்தான் போகிறீர்கள், உழவு மாடுகளைப் பற்றி விவசாயிக்குத் தெரிவதைவிட நோயைப்பற்றி டாக்டர்களுக்குத்தான் தெரியும்’ என்றாள் டாக்டர் கோகிலா.

கோகிலா விடை பெற்றுக் கொள்வதற்குச் சற்று முன்பு சாரதா அங்கு வந்து சேர்ந்தாள். நன்றாகத் தன்னை அலங் கரித்துக் கொண்டிருந்தாள். புதிய புடவை கட்டியிருந்தாள். டாக்டருக்கு அவள் வணக்கம் சொன்னுள். -

“என்ன சாரா, இன்று திருநாளா? மேக்கப் அபாரமாக இருக்கிறதே!’

‘இல்லை டாக்டர், நான் எப்போதும் இப்படித்தான். வெளியில் போகும்போது பெண்கள் சீவிச் சிங்காரித்துத்தானே போகவேண்டும்’ என்றாள் சாரா சிரித்துக் கொண்டே. சாரா வின் பதில் லேடி டாக்டருக்குத் திருப்தி அளிக்கவில்லை. அந்தப்

82

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/83&oldid=699022" இலிருந்து மீள்விக்கப்பட்டது