பக்கம்:பாடகி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசை நாச்சியாரின் உள்ளத்தைத் தொட்டிருக்காது, என்று அவன் அவனுக்குத் தானே சமாதானம் செய்துகொண்டான்.

சாரதாதேவியின் எழிலைப்பற்றி ஏற்கெனவே கூறியிருக் கிருேம். பட்டுப்பூச்சியைப்போல உடம்பைப் பாதுகாத்தாள். இசைக் கவர்ச்சியும், அதேைல ஏற்பட்ட மு க க் க ளே யு ம் அவளுக்கு மேலும் சிறப்பூட்டிக் கொண்டிருந்தன.

சங்கீத வைத்தியம் தொடர்ந்து நடந்து கொண்டு வந்தது. பகல் வேளையில் லேடி டாக்டர் வந்து வந்து போனுள். அவள் இந்த வியாதியை அறை கூவலாகவே எடுத்துக் கொண்டு இது மாதிரி நோய்களைத் தீர்த்து வைத்தே நிறையப் பொருளிட்டி யவள் அந்த டாக்டர். 3.

மூன்று மாதங்களுக்குப் பிறகு நாச்சியாரின் போக்கில் ஒரு சிறு மாறுதல் தெரிந்தது. மலர்ந்த மல்லிகையைப் போல் கண்களை விரித்தபடி இருந்த நாச்சியார் இடையிடையே முறுவல் பூத்தாள். அப்படி அவள் சிரித்து நாட்கள் பலவாகி விட்டன, ஏழு ஸ்வரங்களுக்குள் அடங்கியிருக்கும் எண்ணற்ற கீதங்கள் அவளுக்குச் சிரிப்பூட்டிக் காட்டியது. லேடி டாக்ட ருக்கு மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஒரு நாள் அந்த மகிழ்ச்சியை மயில்வாகனனிடம் கூறி பெருமிதப்பட்டுக் கொண்டாள்.

ஆனால், லேடி டாக்டர் எதிர் பார்த்தபடி மயில் வாகனன் முகத்தில் குளிர்ச்சி ஏற்படவில்லை. லேடி டாக்டரின் பேச்சுக்கு அவன் சுவை கூட்டுவான் என்று லேடி டாக்டர் கோகிலா எதிர் பார்த்திருக்கலாம், அவள் அதில் வெற்றி பெருதது போலவே உணர்ந்தாள்.

ஏன் மயில்வாகனன் அப்படி இருந்தார்? அவருக்கு நமது வைத்தியத்தில் நம்பிக்கை இல்லையோ பைத்தியக்காரத்தன மாக இதையெல்லாம் வைத்திய முறையா என்று கருதிக் கொண்டாரோ? வைத்தியம் என்றால் மருந்து சாப்பிடுவது; அதற்காக பத்தியம் இருப்பது தான் என்று நினைத்துக் கொண் டாரா? மனைவி மேல் உயிரையே வைத்திருக்கும் அவர், மனைவி

81

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/82&oldid=699021" இலிருந்து மீள்விக்கப்பட்டது