பக்கம்:பாடகி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"நிச்சயமாக வெற்றி பெறுவோம், கவலைப்படவேண்டாம். நான் காலை மாலை இரண்டு முறை வருவேன். வேளைக்கு ஒரு மணி நேரம் இருப்பேன். எப்படியாவது ஒரு நல்ல வீடு வாட கைக்கு அமர்த்தி விடுவது நல்லது. அதுதான் நமக்கு வசதி.”

வாடகை வீடு எதற்கு? சொந்த வீடே வாங்கி விடு கிறேன். அதுதான் நமக்கு ரொம்பவும் .ெ ச ள க ரி ய மா க இருக்கும்.”

சாரதாதேவி விடைபெற்றுக் கொண்டான். அவளை வாசல் வரை வந்து அனுப்பி விட்டு மயில்வாகனன் அறைக்குள் நுழைந்தான். நாச்சியாரின் கடைக்கண்கள் நனந்திருந்தன.

“நாச்சியார் கண்ணு!” அவளிடமிருந்து பதில் இல்லை.

உடனே டாக்டருக்குப் போன் செய்து கேட்டான்.

அதற்கு டாக்டர், ‘கண்கள் பூக்கள் மாதிரி, பனியிலும் நனவதுண்டு; மழையிலும் நனவதுண்டு; இதற்கெல்லாம் குழப்பிக் கொள்ளலாமா?’ என்று கூறிவிட்டார்.

2

சாரதாதேவி காலையிலும் மாலையிலும் வந்து மெல்லிசைகள் வாசிக்கத் தொடங்கினள். அந்த இசையை மயில்வாகனனும் அருகிலிருந்தே தினந்தோறும் கேட்டுக் கொண்டிருந்தான். முதலில் மருந்துகளுக்குப் பணியாத நோய் வெறும் நாதத் திற்கா பணியப் போகிறது என்று கூட. மயில்வாகனனுக்கு நினைக்கத் தோன்றியது. ஆனல் தினசரி ராகங்களைக் கேட்டுத் திர வேண்டிய மயில் வாகனனயே, இசைப்பற்று இல்லாத மயில்வாகனனயே எப்போது சாரதாதேவி வருவாள் என்று ஏங்க வைத்து விட்டது என்றால் அணுவளவு கூடவா இந்த

8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/81&oldid=699020" இலிருந்து மீள்விக்கப்பட்டது