பக்கம்:பாடகி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயில்வாகனன் கொஞ்சம் யோ சித் து விட்டு, ‘சாரதா தானே நீங்கள்?’ என்றான் பட்டென்று.

ஆம்; இப்போது என் பெயர் சாரதாதேவி.”

தெருக்களிலெல்லாம் சுவரொட்டிகளில் போடப்பட்டிருக் கிறதே அது யார்?’

‘அதே சாரதா தேவிதான் நான். நான் பெங்களுர் வந்து பத்து வருஷங்களாகி விட்டன.”

பியான வாத்யவித்வான் சாரதா தேவி என்பது நீங்கள் தானு?’ என்று ஆச்சரியத்தோடு கேட்டான் மயில் வாகனன்.

‘நானேதான். ஆச்சரியப்பட வேண்டாம். நான் நன்றாக வசதியாக இருக்கிறேன். வீடு கார் எல்லாம் வைத்திருக்கிறேன். இசை நிகழ்ச்சிகளின் மூலம் நன்முகப் பண ம் ஈட்டுகிறேன். ஆனல் தனிமையில் தான் வாழ்கிறேன்’ என்றாள் சாரதா.

‘உள்ளே வாருங்கள், புகழ் பெற்றவர்களே வாசலில் நிற்க வைத்துப் பேசுவதே குற்றம்’ எ ன் று கூறி மரியாதையுடன் அவளை உள்ளே அழைத்துச் சென்றான், நாச்சியார் நன்றாகத் துங்கிக் கொண்டிருந்தாள். சில நேரங்களில் நினைவிழந்தவளைப் போல் புரண்டு புரண்டு படுத்தாள்.

“டாக்டர் கோகிலாதான் என்னை உங்களிடம் அனுப்பி ஞர்கள். மற்றவற்றையும் டாக்டர் விவரமாகச் சொல்லியிருக் கிறார் என்னுடைய வாத்தியத்தில் இளகாத மனம் இல்லை; மயங்காத பெண் இல்லை; இதுவரை நான் தோற்றதும் இல்லை. உங்கள் மனைவிக்கு நினைவைத் தரவேண்டியது என் பொறுப்பு.’’ என்று அடுக்கிக் கொண்டே போளுள் சாரதா தேவி.

“எப்படியாவது நீங்கள் இருவரும் அவளது வாழ்க்கையைத் திருப்பித் தரவேண்டும். அதற்காக எவ்வவவு தொகை வேண்டு மாலுைம் செலவு செய்ய நான் தயாராக இருக்கிறேன்.” என்றான் மயில்வாகனன். -

7 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/80&oldid=699019" இலிருந்து மீள்விக்கப்பட்டது