பக்கம்:பாடிப் பணிவோம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீட்டுப் பிள்ளைகளும் தினந்தோறும் இரவு நேரத்தில் பூசை அறையிலே அருட்செல்வர்கள் இயற்றிய பல பாடல் களைப் பாடுவோம். நாளடைவில்,ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு பாடல் எழுதவேண்டுமென்ற ஆசை என் உள்ளத்தில் தோன்றியது. அதன் விளைவாகச் சில ப ா ட ல் க அள எழுதினேன். தினந்தோறும் அப்பாடல்களே நாங்கள் பாடுவோம். அப்பாடல்களைத் தவிர அவ்வப்போது சில மலர்களுக்காகவும்,தொகுப்புகளுக்காகவும் சிலபாடல்களே எழுதினேன். ஒருநாள் நான் பணிபுரியும் பாங் கி ற் கு வருகைதந்த ஒரு சகோதரி, நாங்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிவன் கோவிலில் சேர்ந்து பாடிவருகிருேம். எங்களுக்கு உதவுகிற மாதிரி பாட்டுப் புத்தகம் ஏதாவது எழுதியிருக் கிறீர்களா?” என்று கேட்டார்கள். 'இல்லை எனப் பதிலளித்த நான், அன்று மாலே விடுதிரும்பி யதும், இதுவரை நாம் எழுதிய பக்திப்பாடல்கள் எத்தனை இருக்குமென எண்ணிப் பார்த்தேன். அவற்றையெல்லாம் அன்று இரவே தேடிப் பிடித்தேன். அவற்றைப் பிரதி எடுத்தேன். ஒரு சிறு புத்தகமாக வெளியிடலாம் என்ற நம்பிக்கை தோன்றியது. மறுநாள் என் இனிய நண்பரும், செல்வி பதிப்பக அதிபரு மாகிய திரு. வீர. சிவராமன் அவர்களிடம் கைப்பிரதியைக் காட்டி, "இவற்றை எந்த அச்சகத்தில் கொடுக்கலாம்?” எனக் கேட்டேன். உடனே அவர், அப்பாடல்களைத் தாமே வெளியிட விரும்புவ தாகக் கூறினர். மகிழ்ச்சியோடு இசைந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடிப்_பணிவோம்.pdf/8&oldid=811454" இலிருந்து மீள்விக்கப்பட்டது