பக்கம்:பாடுங்குயில்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிக்கோளை நோக்கி

ズ /・/ ?ク入

நடந்து செல்கிறேன் நடந்து செல்கிறேன் நலிந்து போயுடல் மெலிந்து தேயினும்

-நடந்து கடந்த பாதையில் நிகழ்ந்த வேதனை கலங்க வைப்பினும் மயங்க வில்லைநான்

-நடந்து அடர்ந்த காடுகள் படர்ந்த மேடுகள் அலைகள் மோதிடும் ஆழ்ந்த ஆறுகள் கொடுங்கண் பார்வையின் விலங்கு மேவினும் கொண்ட என் குறிக் கோளை நோக்கியே

-நடந்து

இருண்ட கண்ணுடன் இரண்டு கால்களும் சுருண்டு வீழினும் தொடர்ந்து செல்கிறேன் மருண்டு சோர்கிலேன் வெருண்டு தாழ்கிலேன் உருண்டு சென்றுமே உயர்வைக் கானுவேன்

-நடந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/102&oldid=593977" இலிருந்து மீள்விக்கப்பட்டது